தேடல்

பூவையவள் புதிதாகப் பார்த்தாள்
பாலகன(ண)வன் பாவமெனப் பார்த்தான்
புதிய நினைவுகளில் மிதந்து
புயலெனப் பாய்ந்தான்...

புயலின் வேகம் குறைந்து
தென்றலென தவழ்ந்தது
தேகத்தின் மீது

(இதய) துடிப்பின் எல்லையது
தூரத்து இமயத்திற்கு சென்றது

இருளில் இணைந்து
ஒளியில் ஒளிந்து
புதுஒலியால் புன்னகைத்தோம்....

தீரக் கூடியதல்ல தேடல்கள்
தொடரக்கூடியது...!

எழுதியவர் : சஸ்மிதா (28-Jun-15, 11:14 pm)
சேர்த்தது : சஸ்மிதா
Tanglish : thedal
பார்வை : 73

மேலே