காதல் மழைநீர்

அன்பே.!

காதல்மழை பெய்தபோது
உன் கண்ணக்குழியில்
மழைநீராய் குதித்து மகிழ்ந்தேன்.!

இன்று.!

நீ பிரிந்து சென்றப்பின்னே
சாலையோர குழிகளில்
தேங்கிக்கிடக்கும் மழைநீர் ஆனேன்.!

என் இதயப்பள்ளங்களில்
உன் நினைவுகளே
மழைநீராய் தேங்கி கிடக்கிறது.!

எழுதியவர் : பார்த்திப மணி (29-Jun-15, 10:39 am)
Tanglish : kaadhal mazhaineer
பார்வை : 353

மேலே