கடற்கரை காதலி
வெள்ளை பொன்னாடை போட்டு ...
வெளியில் நிற்பவளே .....
நீ தந்த வெளிச்சத்தில்...
சோறு தின்னக் கூட்டம் .....இங்கு ...
கதிரவன் மேல் பட்டு... கலை
இழிந்த கருப்பினம் நானோ!!!
அவன்...துளி உன்மேல் பட்டா?
இத்தனை அழகு ..என்று
தினம் தினம் அனந்து பார்க்கும் ....
அரைகிறுக்கன்.... வசனமடி....
பொய்யில் பிழை இல்லை என்றால்....
பொய்த்து போகாது என்று.......
பிள்ளைக்கு அன்னமிட்ட ... அவள் தாய்
என்றால்... அவளுக்கு நீ யாரோ?
கண்ணைமூடி வருகின்ற கவிதையில் எல்லாம்
உன்னை விட்டுப்போன கவிஞன்...
என எவனும் உண்டோ?....
கடற்கரை மணலினிலே...
கால் கொஞ்சம் நனைகையிலே...
கதிரவன் சற்று உறங்கையிலே...
நீ தந்த வெளிச்சத்தில்... சினுங்குகின்ற அலைகள் ...
எத்தனை முத்தங்கள் என் பாதத்திற்கு..
முத்தங்கள் என்று சொன்ன போதுதான்... என்
கற்பனைக்கு உன் வெட்கம் கொஞ்சம் விசாலமானது.....
இத்தனை.... அழகுடன் இருப்பதால் தானோ!!!....
இன்னமும் வெட்கப்படுகின்றாய்...
நீ ஒளிந்து கொள்ளும் போதெல்லாம்.... உன்
உடல் அங்கம் சில தெரிவதில் ...
எத்தனை சுகமடி.......
இத்தனை காலம் கழிந்தும்.... உன்
அழகு ஒருத்துளிக்கூட உருகவில்லையடி ....
உன் அழகை அண்ணாந்து பார்க்கும்.....
அரைகிறுக்கன்.... நானடி...