மாயம் செய்கிறாய்
நீ உச்சரிக்கும் போது மட்டும் அழகாய் தோன்றும் என் பெயர்!
நீ அழைக்கும் போது மட்டும் செல்லமாய் சிணுங்கும் என் தொலைபேசி!
நீ நெருங்கும் போது மட்டும் அலைபாயும் என் விழிகள்!
நீ அருகில் இருக்கும் போது மட்டும் பேச மறுக்கும் என் இதழ்கள்!
நீ தொலைவில் இருக்கும் போது மட்டும் கவிதையாகும் என் எழுத்துக்கள்!
என்ன மாயம் செய்தாய் எனக்குள் சொல்லி விடு என்னிடம் மட்டும்!!!!!