வாழ்வில் வெற்றி நமதே

2011 ல் புதுக்கவிதை

அன்பின் ஆற்றலை,
நேரத்தின் அருமையை,
எளிமையின் மேன்மையை;

உழைப்பின் மகிழ்வை,
விடாமுயற்சியின் பயனை,
நினைவில் கொள்ளுங்கள்.

குண நலனின் தகைமையை,
கடமையில் உள்ள பிணைப்பை,
பொருளாதாரத்தின் பயன்பாட்டை;

பொறுமையின் விளைவை,
திறமையின் உயர்வை,
நினைவில் கொள்ளுங்கள்.

2015 ல் மரபுக் கவிதை

வாழ்வில் - வெற்றி நமதே...

வாழ்வில் வெற்றி நமதே – பல விகற்ப இன்னிசை வெண்பா

அன்புதனின் ஆற்றலும், நேர அருமை,
எளிமையின் மேன்மை, உழைப்பின் மகிழ்வை,
விடாமுயற்சி யின்பயனை நெஞ்சினில் வைத்திடில்,
வெற்றி நமதேவாழ் வில்! 1

குணநல னின்தகைமை, தன்கடமை யில்கொண்ட
நல்பிணைப்பு, நும்பொருளா தாரப் பயன்பாடு,
வெல்லும் பொறுமையின் நல்விளைவை நீஉணர்ந்தால்
வெற்றியும் உண்டே உனக்கு! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jun-15, 6:58 pm)
பார்வை : 619

மேலே