வடக்கூரும் தெக்கூரும்

................................................................................................................................................................................................
தனனானே தனனானா தனனானே தனனானா
தனன தனன தன்னன்னானா தன
தனன தனன தன்னன்னானா

வடக்கால ஒரு ஊரு, தெக்கால ஒரு ஊரு,
நடுவா நடையப் போடும் ஆறு - நட்ட
நடுவா நடையப் போடும் ஆறு

எடக்கால மடக்கால எதுனாச்சும் கொறைவச்சி
எதிரும் புதிரும் நிக்கும் ஊரு – சும்மா
எதிரும் புதிரும் நிக்கும் ஊரு..

சாதிக்கும் மோதிக்கும்; சவத்துக்கும் மோதிக்கும்;
சட்டதிட்டம் ஒண்ணும் இல்ல – அட
சட்டதிட்டம் ஒண்ணும் இல்ல...

பாதிக்கும் மேலப்போம் பங்காளிப் புள்ளைங்க
பாசபந்தம் கூடத் தொல்ல – இவிங்க
பாசபந்தம் கூடத் தொல்ல !

கருக்கரி வாளுக்கும் கருவேலக் கட்டைக்கும்
ஓய்வு ஒழிச்சலேதும் இல்ல- ஒரு
ஓய்வு ஒழிச்சலேதும் இல்ல !

சரக்கொண்ணு போட்டுட்டு சரமாரி வெட்டத்தான்
சகுனம் பாத்துப் போவான் உள்ள- நல்ல
சகுனம் பாத்துப் போவான் உள்ள...!

அடிச்சோடு சுடும் ஆறு அடங்காமப் பெருக்கோடி
ஆட்டம் கண்டதொரு ஊரு – பேய்
ஆட்டம் கண்டதொரு ஊரு....!

முடிச்சோடு முப்பாட்டன் சொத்தெல்லாம் வெள்ளத்தில்
முண்டிப் பொரளுது பாரு – வேகம்
முண்டிப் பொரளுது பாரு...

அடிச்சாலும் புடிச்சாலும் அவியளுக்(கு) நாமின்னு
அன்னந்தண்ணி தந்த தாரு – நல்ல
அன்னந்தண்ணி தந்த தாரு ??

வடக்கூரு பிடி சாய்ஞ்சா தெக்கூரு காப்பாத்தும்
வாரி வழங்குதம்மா சீரு – நின்னு
வாரி வழங்குதம்மா சீரு...!

வெள்ளந்தே வடிஞ்சாச்சு; அல்லோலம் முடிஞ்சாச்சு
ஆகா, நன்றி சொல்லிப் போகும் - ஜனம்
ஆகா, நன்றி சொல்லிப் போகும்...!

செல்லாத்தா கரகத்தில் பொல்லாப்பு புறப்பட்டு
செயினும் செருப்பும் துள்ளிப் பாயும் – சைக்கிள்
செயினும் செருப்பும் துள்ளிப் பாயும்.....!

வடக்கால ஒரு ஊரு, தெக்கால ஒரு ஊரு,
நடுவா நடையப் போடும் ஆறு - நட்ட
நடுவா நடையப்போடும் ஆறு

எடக்கால மடக்கால எதுனாச்சும் கொறைவச்சி
எதிரும் புதிரும் நிக்கும் ஊரு – சும்மா
எதிரும் புதிரும் நிக்கும் ஊரு.......

(கவிதை அப்படியே போகும்)

................................................................................................................................................................................................

(பாதிக்கும் மேலப்போம்- பாதிக்கும் மேலே போகும்; அடிச்சோடு- உள்ளங்கால்; அவியளுக்கு- அவர்களுக்கு; வெள்ளந்தே- வெள்ளம்தான்; அல்லோலம்- அல்லல், துன்பம்)

............................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (29-Jun-15, 8:32 pm)
பார்வை : 59

மேலே