பரங்கிப்பழமாய்
இப்போதெல்லாம்
தேக ஆரோக்கியமென்பது
தேய்பிறை
நிலவாகிப்போனது,
உடற்பயிற்சி ஆசிரியர்
ஓதிய வார்த்தைகள்,
பொறித்த பதார்த்தங்களுக்குள்
புதைந்து போனது....
அவித்த உணவையும்,
வறுத்தேயுண்ணுதல்
ருசியாகி போனது
நாவிற்கு....
ஆரோக்கியத்தை முன்னிட்டு
சான்றோர் சொன்ன வார்த்தைகளை,
தலைக்கு வைத்து படுத்ததி்ல்,
உடல்வீங்கி போனது
பரங்கிப்பழமாய்.....
மருத்துவரை நாடினால்,
பரிந்துரைக்கிறார் இப்படி....
எல்லாம் கொழுப்புத்தான்,
உண்டவுடன் உறங்காதீர்
அது ஆரோக்கியகேடு,
எண்ணெய் பதார்த்தங்களை
எட்டி வையுங்கள்,
வாயு நிரப்பபட்ட
குளிர்பானங்களை
தூரயெறியுங்கள்,
அவித்த உணவுகளையே
அளவாய் உண்ணுங்கள்....
யோகாசனம்....
யோசிக்கிறீர்களா.....?
மூச்சுபயிற்சி......
முடியாதென்கிறீர்களா......?
அட... அதுவும் வேண்டாம்.....
நடைபயிற்சி.....
அதிகம் வேண்டாம்,
அரைமணி நேரம்,
முயன்றால்
முடியாததொன்றுமில்லை....
முயன்றுதான் பாருங்களேன்
இன்றிலிருந்து.....