ஏழாம் அறிவு ஜீவன்கள் - மரங்கள் - 12314

தினம் தோறும் பிறந்தநாள்
தினுசு தினுசா புதுச் சட்டை
அழகழகா மரத்துக்கு
அந்த சூரியன் கொடுக்குது.....!!

சிலுக்குச் சட்டை அணிந்த மரம்
சிரித்து சிரித்து மகிழுது - அதன்
சிந்தையெல்லாம் பசுமையாகி
செழிப்புறவே வளருது......!!

பாஷையின்றி பாசமுண்டு - புறப்
பார்வையதற்கு தெரியாது
மரங்களுக்கும் மனசு உண்டு அது
மனுசனுக்குப் புரியாது......!!

எழுதியவர் : ஹரி (30-Jun-15, 6:43 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 112

மேலே