என் காவிரியும் கண்ணீரும்

மீனின் கண்ணீரை யார் அறிவார்.... என்று
சொன்ன கவிஞனே.... என்
நதி(காவேரி) சிந்தும் கண்ணீரை..... நீ
அறிவாயோ???

அதிகாலை சூரியன்....அலுங்காமல்...
என் வீடு புகுந்திட....
அதை கண்டு சொக்கி நிற்கும் .. என்
கண்கள் சோம்பல் முறித்திட.
உன்னை தினம் தொட்டு பார்க்க வந்த... உன்
தோழன் நானடி....

உன்னை அள்ளி எடுத்து...
கால் துடைத்த வேலை உண்டு...
உன்னுள் மொத்தம் புதைந்து... எனை
நனைத்த பொழுதுகள் உண்டு...

குளிர்காலத்தில் ... உன்னை தொட்டு முத்தமிட்டால்...
உடல்கள் கொஞ்சம் நனைத்து விட்டால்.... என்
ரோமங்கள் அனைத்தும் உனக்கு மரியாதை செய்யும்...
உதட்டினுள் ஒளிந்திருக்கும் முத்துக்கள் தாளமிடும்......

உன்மீது ஏறி குதித்தேன்.... வலிக்கவில்லை என்று
சிரித்துகொன்டே என்னை தூக்கிவிட்டாய் ...
நீ கடைசியில் போகும் இடம் யாதென கேட்டான்...
முத்துக்களை தத்தெடுக்கும் என் அப்பன் சமுத்திரம் என்றாய்...
இப்படி தினம் தினம் உன்னோடு பேசி பழகும்... நீ
எந்தன் பொன்னான தோழியடி....

நீயும் கதிரவனும் ....
காதல் ஜோடி என்று ...
இத்தனை நாள் ஏனடி மறைத்தாய்....

அவன் கோவபட்டால்..... அவன் அருகில் நீ
சென்று அதனை தணிக்க...
நீ தெரியாது கார்மேகம் மறைத்து விட்டால்... அவன் மீது
கோவப்பட்டு அவன் கண்ணீரால் உன் உடல் நனைக்க....
இத்தனையும் சத்தமில்லாமல்.... யாரும்
சந்தேகிக்காமல்.....இத்தனை நாள் எப்படி.....

என்று யோசித்துக்கொண்டே...
சில காலம் கழிந்திட... மறுபடி
ஒருநாள் உனை பார்க்க ஓடி வந்த
உன் தோழன் நானடி...

உடல் கொஞ்சம் மெலிந்து....
உருவம் கலை இழந்து...
நீ நீயென தெரியாது ... நான்
தேடி அலைந்த காலம் இதுவடி....

நீ போகும் போது உன் மீது மோதும்...
பாறைகளின் தாகம் நனைக்க ... ஆளில்லாமல்
எரிந்து கொண்டிருக்கிறதே....

அங்கே ஒரு கூட்டம் உன்னை தோண்டி ...
விற்று கொண்டிருகிறது... உன்
வாழ்க்கை மொத்தம் முடிந்து விட்டதென்று....

இங்கே ஒரு கூட்டம் .....
உன்னை வேண்டி இறைவனிடம்...
கையேந்தி கொண்டிருகிறது....

நீ இறக்கபோகின்றாய் என
உனக்காக நான் சிந்தும் கண்ணீர்...
உனக்கு போதாதே.... ஐயோ பாவம்
உனக்காக நீ சிந்தும் கண்ணீர்
யாருக்கும் தெரியாதே....

பகலவன் செய்யும் இந்த கொடுமைக்கு ...
பலியான உன் தோழிகள் எத்தனை பேர்... தெரிந்திருந்தும்
அவன் மீது காதல் கொண்டாய்....உன்னையும்
கற்பழித்து கை விட்டானே... என்று
உனை பார்த்து இன்று ... தினம்
புலம்பும் உன் தோழன் நானடி....

எழுதியவர் : ராஜேஷ் (30-Jun-15, 3:28 pm)
பார்வை : 108

மேலே