கால வேதியியல்
வேதியியலில் மாற்றம் கண்டேன்
மேதினியில் ஏற்றம் கண்டேன்
சமுதாய விலங்குகளில் மானுடனே
வியத்தகு முதல் மாற்றம்
ஆதாமும் ஏவாளும்
பிறந்த நாள் முதற்கொண்டே
பழகிய விதம் கண்டே
வேதியியல் மாற்றம் கண்டான்
ஆடை கண்டான்
கற்களின் மாற்றம் நெருப்பு கண்டான்
சிந்தனையில் மாற்றம் சக்கரம்
செய்து கொண்டான்
நீரில் வேதியியல் மாற்றம்
சிந்து சமவெளி கண்டான்
அணுக்களிலே பிறந்து
அணுவையே துளைத்தவன் - மனிதன்
இவன் சிந்தனையில் மாற்றம்
வேதியியலில் ஏற்றம்
அவனின்றி ஓர் அணுவும் அசையாது
இவனின்றி ஓர் கனவும் மசியாது
அன்பில் மாற்றம்
காதல் கொண்டான்
பண்பில் மாற்றம்
கருவிகள் கண்டான்
அன்றாட வாழ்க்கையில்
அறிவியலில் வேதியியலும்
பிரிக்க முடியா மாற்றம் கண்டேன்
இயற்கையில் வேதியியல்
கலப்படம் என்றேன்
இயற்கையோ செயற்கையோ
வேதியியலில் கலக்கும் என்றேன்
இயற்கையை இறைவன் படைத்தான்
வேதியியலை மனிதன் பிரித்தான்
இயற்கையையும் மனிதனையும்
பிரித்துப் பார்க்க வேதியலில்
வினைகள் இல்லை
அமுதத்திலிருந்து
அழகுசாதனப் பொருட்கள் வரை
வேதியியலில் கலந்தோமே
வேதியியல் இல்லாப் பொருட்களும்
பொருட்களில் இல்லா வேதியியலும்
எண்ணிப்பார்க்க இயலவில்லை
கன்னிக்கு எப்போதும்
கணினிக்கு இப்போதும்
வேதியியல் ஈர்ப்பு உண்டு