உன் மனதின் ஆழம் அறிவேன்

அன்பே.!

உன் மனதின் ஆழம் அறிய
செயற்கைகோளாய் சுற்றி வந்து
தோல்வி கண்டேனே.!

காற்றையே ஆக்ஸிஜன்
நைட்ரஜன் என பிரித்துக்கூறிய
அறிவியலும் தோற்றதே.!

சோர்ந்து விடுவேனோ.!

உன் மனதின் ஆழத்தில்
என் கண்ணீரை நிரப்பி
என் காதல் படகில்
வலம் வருவேன்.!

இல்லையேல்.!

என் கண்ணீரே மழைநீராய்
உன் மனதின் ஆழத்தில்
சேகரிக்கப்படடும்.!

எழுதியவர் : பார்த்திப மணி (30-Jun-15, 9:50 pm)
பார்வை : 302

மேலே