அழுகின்ற வினாடி சிரிக்கின்ற நிமிடங்கள் 555

உயிரே...
பூக்களை பார்க்கும்
போதெல்லாம்...
நீ எனக்கு பறித்து கொடுத்த
செம்பருத்தியின் ஞாபகம்தானடி...
உடனே மறையும் காயங்களடி
உன் காதல்...
என்றுமே மறையாத வடுக்களடி
என் காதல்...
உனக்காக அன்று
காத்திருந்தது சுகம்தானடி...
இன்று உனக்காக விழிகளில்
வழியும் கண்ணீர்கூட தித்திக்குதுடி...
அழுகின்ற வினாடியும்
சிரிக்கின்ற நிமிடமும்...
இனி என்
வாழ்வில் ஏதடி...
நம் காதலின் நினைவில்.....