என் தேவையை உணர்ந்த நீயோ

நெருஞ்சில் பாதையில்
உன் கை கோர்த்து
நடக்கையில்!
நடந்து வந்த
பாதையை
சற்றே திரும்பிப் பார்த்தேன்!
நெருஞ்சில் பூக்கள்
குங்கும பூக்களாய்
உருமாறி நின்றன...
பாதையின் முடிவில்
கருவேலந்தோப்பு!
அங்கே ஓய்வெடுக்க
அமர்கையில் !
உன் கால்களை
என் மடியில் தாங்கி
பாதங்களை கண்ணீரால்
கழுவி காயங்களை
ஆற்றிக்கொண்டிருந்தேன்...
ஓய்வை தொடர்ந்து
மீண்டும் பயணம்...
எழுந்து நிற்க
எனக்கு ஊன்றுகோல்
தேவைப்பட்டது!
என் தேவையை
உணர்ந்த நீயோ!
என்னை தூக்கிக் கொண்டு
நடக்க ஆரம்பித்து விட்டாய்....