கவிதை திருடர்கள்

கவிதை திருடர்கள்

என்னால் எழுதப்பட்டவைகள்
அனைத்தும் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும்
வேறு வார்த்தைகளில்
வேறு மொழிகளில்

எனக்கு ஏற்பட்ட உணர்வுகள்
ஏற்கனவே உணரப்பட்டிருக்கும்
இன்னொருவரால் வேறுவகையில்

உங்கள் கற்பனையின் வேர்கள்
வேறொரு கவிதையின் விழுதுகள்

நீங்கள் உருவம் கொடுத்தது
ஏற்கனவே இருந்த ஒன்றுக்குத்தான்
வேறு உருவில்

உங்களது படைப்பு
வேறொரு படைப்பின் தாக்கம்


உங்களது புரிதல் சுற்றிருப்பவர்களின்
வார்த்தைகளிலிருந்தும் வாழ்கையிலிருந்தும்
உண்டானது

உங்களது எண்ணங்களின் விதை
இங்கிருந்தான் தூவப்பட்டது

ரிக் வேதம் முதல் எழுத்து.காம் வரை
எங்கிருந்தாவது எடுத்தை
என்பார்வையில் சொல்வதுதான்
கவிதை

அறம் சொல்லும் கவிஞர் முதல்
ஹைக்கூ எழுதும் கவிஞர் வரை
அனைவரும் அப்படியே

எல்லா கவிதைக் கருக்களும்
உருவானது
இறந்தக்கால நிகழ்கால
இவ்வுலக நிகழ்வுகளிருந்துதான்

எல்லா கவிஞர்களாலும்
எல்லா கவிதைகளும்
ஒருவகையில்
இவ்வுலகிலிருந்து திருடப்பட்டதே
வேறுவகையில்

எனவே கவிதை திருடுவது தவறில்லை
திருடுங்கள் ஆனால்

என் எண்ணங்கள்
என் வார்த்தைகள்
என் வரிகளை
அப்படியே திருடுபவர்கள்
என் பெயரையும்
சேர்த்து திருடுங்கள்

எழுதியவர் : இ ஆ சதீஸ்குமார் (1-Jul-15, 12:15 pm)
பார்வை : 178

மேலே