குலத்து மீன்கள்
தென்னங்கீற்றின் இடைவெளியில் மதியொளியும்....
தேகம் தணுக்கும் தென்றல் காற்றும்....
காற்றின் வழியில் தெம்மாங்கு தேமதுர இசையும்....
மனம் கொண்டவளை எண்ணி சென்றது...
செவ்வாளுக்கு ஓய்வளித்து.....
கன்னி அவள் கடைக்கண் பார்வை
இக்காளை மீது முதன் முதலாய் ஊரின் குளத்தருகே...
வியப்பு என் விழிகளில்
சேதாம்பலே சேதாம்பலை சூடும்போது!!!!
ஆம்பல் முகத்தவள் இவள் அந்தணன் மகளாவாள்...
இவன் மறவன் மாற்றுக்குலத்தான் என எண்ணி
மணம் கொள்ளமாட்டளோ!! என்றோர் ஐயம்?
மனம் கொள்ளவில்லை இருந்தாலும்
என்திறம் காட்டி வென்றேன் அவள் மனதை...
ஆற்றங்கரையினிலே அந்திமாலை பொழுதினிலே
காத்திருந்தாள் கன்னி அவள்
காதலனை எண்ணி எண்ணி.....
காளை நான் வந்த பின்பு
காதல் வளர்ந்தது பிறைபோல் தினமும்
இது காமம் சொல்லாத காதல் மொழி
சாட்சியாக விண்மீன் கூட்டம்......
அட! அந்தணன் மகளே என் காதலை
எங்ஙனம் உரைப்பேன் உன் தந்தையிடம்...
வீரம் மறவனின் பண்பெனக்குறி அவள் வீடு சென்றேன்
"அந்தணரே" என விளித்து திண்ணையில் அமரும்போது
"நில்" என்ற சீற்றம் என் செவி இரைத்தது....
"என் திண்ணையில் நீ அமர்ந்தால் தீட்டு " என்ற பதில்
வினாமுன் விடையாய் போனது......
அவர் திண்ணையில்கூட இடம் இல்லா எனக்கு
அவர் பெண்ணின் மனதில் ஓர் இடம் என்றால் விடுவாரா?
கன்னியவள் காதலினால் அச்சம் தவிர்த்து
உற்றது உரைத்தேன்.....
"சேரியில் பிறந்த உனக்கு செந்தாமரையா? முடியாது"
என்று சொன்ன மூன்றாம் நாளே
ஐம்பது வயது அந்தணனுக்கு இரண்டாம் தாரமானாள்....
இழிக்குலம் எனக்கூறி
இளைத்த அநீதியின் காரணம் மனுநீதி
செம்பரிதி பொன்விசிம்பில் செழித்தெழ..
செவ்வாளும் குருதியில் குளிக்க விழித்தெழ...
மறம் எனக்கூறி களம் சென்றேன்...
மனுதர்மப்படி அதர்மத்தை நிலைநாட்ட
கண்விழியில் கசிந்த நீரோடு சேர்ந்த
அவள் நினைவோடும்.......
ஜெயக்குமார் கல்யாணசுந்தரம்