மருந்தாய்

வார்த்தைகளில் துப்பிவிடு
வலிகளை!
கண்ணீரில் கரைத்துவிடு
காயங்களை!
மறத்தலில் இருக்கு சூட்சுமம்
மாற்றங்களில் இருக்கிறது மகிழ்ச்சி!
எங்கள்
புன்னகையில் உன்
முகமும் பூக்கட்டும்!
சில நொடிகளில்
மனம் வலிகளை மறக்க
மருந்து நட்பு மட்டுமே!
விலையாய் நீ எங்களுடன்
விளையாடினால் போதும்!
சேர்ந்தே ஓடலாம்,ஆடலாம்
சந்தோஷப் புன்னகை
சங்கீதம் வாசிக்க
சம்மதம் சொல்லிடு தோழி!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (1-Jul-15, 4:18 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 79

மேலே