உறவு ஒன்று உயில் எழுதுகிறது - 13

எதிர் வரும் எல்லா முகங்களிலும்
உன் முகம் தேடுகின்றேன்.
சம்மந்தமே இல்லாத
சந்து பொந்துகளில் கூட உன்னை
சந்தித்து விட மாட்டோமா என ஏங்குகிறேன்.

சொல்லி முடித்ததை விட - நான்
உன்னில் சொல்ல நினைத்தது அதிகம்.
சொல்லை ரசித்ததை விட - நான்
உன்னை சொல்லி ரசித்தது அதிகம்.

ஒரு ஜோடி விழியோடும் - உன்
ஒரு கோடி மொழியோடும்
ஒவ்வொரு நாளும் போராட்டம் எனக்கு.

விளக்கணைந்த பொழுதுகளில் - என்
விளங்காத கனவுகளில்
விதவிதமாயுன் தேரோட்டம் எதற்கு.

நீ வராத கனவுகள் எப்படி
என் கவனத்துக்கு வருவதில்லையோ
அதுபோல்
நீயின்றி எழுதும் என் நினைவேட்டுப் பக்கங்கள்
வெறும் வெள்ளை தாள்களாகவே இருக்கிறது.

விரும்பித் தேடிய என் விழிகள்
விலகிக் கொண்டது.
ஆனாலும்
காதுகள் மட்டும்
கணக்கெடுத்துக் கொண்டிருகின்றன
உன் காலடி சத்தத்தை.....

எழுதியவர் : parkavi (1-Jul-15, 6:36 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 113

மேலே