ஹெல்மட் -ரகு

அவிழ்ந்து சிதறடிக்கும்
பயணக் கனவுகள்
பட்டு வீழுமோ ?

போதைப் பிறழ்வுகள்
அலைபேசி அவிழ்ப்புகள்
மட்டுப் படுமோ ?

விதிமுறை
விளங்கா வாகன வழிசல்
தூர்ந்து போகுமோ ?

கறையின்றி நீண்டதென
தார் சாலை யொன்று
வரலாறு தொடுமோ ?

உயிர்சொட்டுக்கள் கசியா
மணித்துளிகள் இனியேனும்
மலரக் கூடுமோ ?

வாழ்வில்
யாது நிகழ்த்தி வரவின்
நியாயப் பக்கங்கள்
நிறைக்கும் இந்தக் கட்டாயத்
தலைக் கவசம் !

எழுதியவர் : சுஜய் ரகு (1-Jul-15, 8:43 pm)
பார்வை : 97

மேலே