என் மனைவி

சீனீயில் வடித்த மோகினிச்சிலை ,
தாமரை இலையும் அவள்மேல் ஓட்டும்,
விட்டுக்கொடுத்தே பட்டுப்போனவள் ,
கண்ணீர் கயிற்றில் கடலையும் இழுப்பாள் ,
நான் கண்ணீர் வடித்தால் உயிரையும் கொடுப்பாள் ,
அவளை தீண்டும்போதேல்லாம் வலி எனக்கு ,
என்மனம் வாடும்போதேல்லாம் வலி அவளுக்கு ,
எனது உலகின் ராணி அவள் ,
அவளது உலகே நான்தான் ,
அவள் என் வீடு நாய்க்குட்டி ,
அதன் கழுத்தில் கட்டிய மணி நான் ,
அவள் என்றாவது மனம்திறந்து சிரிக்கயில் ஒரு அழகு ,
அவள் என்றும் அழுகையில் மூக்குச்சிவந்திடும் தனி அழகு ,
அவள் கண்ஜாடையில் ஒருகோடி அர்த்தங்கள் ,அதில் கைதேர்ந்த கவிஞன் நான் ,
இன்றோ என் தலையில் முடிகள் ஒன்றும் இல்லை ,
அவள் வாயில் பர்கல்கூட இல்லை ,
அவள் உயிர் நான் என்பதாலா என் உயிர் முதல்பிரிந்திட அவள் வேண்டுகின்றாள் ,
அவள் உயிர்பிரிந்தபின் நான் என்ன செய்வேன் அதை அவள் எண்ணி தினம் வருந்துகின்றாள் ,
நாய் இறந்தபின்னும் அதன் மணி அசைந்திட நாயின் நினைவு தோன்றும் ,
அவள் இறந்தபின்னும் அவள் நினைவுகள் இருக்கையில் வேறு என்ன வேண்டும் .

எழுதியவர் : ஆனந் (2-Jul-15, 9:45 am)
Tanglish : en manaivi
பார்வை : 5453

மேலே