இறைவா

சோதனை தருவதில் நீ வல்லவன்
வேதனை இன்றி ஏற்ப்போம் நாங்கள்
உலகமே கூடி உருவாக்க நினைப்பது
உன் நாட்டம் இன்றி நடவாது
உலகமே கூடி ஒழிக்க நினைப்பது
உன் நாட்டம் இன்றி நிறைவேறாது
அற்ப நேரத்தில் அற்புதங்களை நீ
மட்டுமே நிகழ்த்த முடியும்
நாங்கள் பொறுப்புகளை உன்னிடம்
மட்டுமே சாட்டுகிறோம்
நீ நேசிப்பதில் என்றும் இன்னும்
வலிமை மிக்கவன்
மறைவான மற்றும் பகிரங்கமான
எல்லாவற்றையும் அறிந்தவன்
கூலிகளையும் தண்டனைகளையும்
தருவதில் ஆற்றல் மிக்கவன்
அழகிய இளமை ஓய்ந்த முதுமை
உன் அற்புத படைப்புகள்
கடுகளவு பெருமை இருந்தால் கூட
நரகத்தை தருபவன்
மன்னராக இருந்தாலும் மண்ணறை
விசாலம் ஆவது உன் ஆணைப்படி
நல அமல்கள் நற்செயல் கொண்டே
நரகை விட்டு தூரமாக்குவாய்
அணு தினமும் அழுது தொழுது
உன்னிடமே பாவ மன்னிப்பு கோருகிறோம்
பாவங்க்களை மன்னிப்பதில் நீ
மட்டுமே கருணை மிக்கவன்
இன்னும் எம்மை எல்லாம் நீ
நேர் வழி காட்டி நிறைவான
எம் பெருமானார் காட்டி சென்ற
வழியில் வாழ்ந்து ,மரணித்து
சொர்க்க வாசிகளாக ஆக்கி
தருவாயாக !
ஆமீன் ! யாரப்பில் ஆலமீன் !!
கவிஞர்.இறைநேசன்