நலமுடன் வாழ்

உன்னிடம் பேச துடிக்கும்
என் இதயத்தை
கொன்று விட்டு தான்
மௌனம் சாதிக்கிறேன்
நீ என்னை விட்டு
விலக வேண்டும் என்று...
காரணம்... என்ன காரணம்
சொல்வேன்?....உனக்கான
பொருத்தமானவள் நான்
இல்லை என்றா?...
சொன்னாலும் நீ
அதை ஏற்க போவதில்லையே...
சொல்லாமலே செல்கிறேன்...
நான் நேசிக்கும் நீ
நலமுடன் வாழ...