ஒரு மனம் திறந்த கடைசி மடல்

நிறைய எழுதி விட்டேன் . நிறைய நன்றி சொல்லி விட்டேன் .நிறைய கோபப் பட்டும் இருக்கிறேன் .
நிறைய மகிழ்ச்சி , நிறைய முரண்பாடு , கொஞ்சம் சண்டை , கொஞ்சம் comprmise என எழுத்து பயணம்
முடித்துக் கொண்டேன் .

காரணம் ..இதன் அடுத்த கட்டம் பத்திரிக்கை , பிறகு நூல் வெளியீடு , பிறகு மீடியா என போகலாம் .போகாமலும் இருக்கலாம் .

ஏனெனில் எழுத்து என் தொழில் இல்லை . அதை தொழிலை தொடர அபார இலக்கிய ஞானம் வேண்டும் அல்லது தைரியம் வேண்டும் ( பொருளாதார சிக்கல்களை எதிர் கொள்வதை சொல்கிறேன் )
இரண்டும் என்னிடம் இல்லை ....

இப்போதைக்கு நல்ல இலக்கிய நட்புகள் மட்டும் வளர்த்துக் கொண்டு இருக்கிறேன் ..அதுவும் என் தொழில் பாதிக்கும் எனில் நிச்சயம் நிறுத்தி விடுவேன் .சொல்வதில் குற்ற உணர்ச்சி ஏதுமில்லை .

சரி விஷயத்துக்கு வருகிறேன் ...

இரண்டு செய்திகள்

ஒன்று தளத்தாருக்கு - நீங்கள் இன்னும் கொஞ்சம் சீரியஸ் ஆக எழுத்தை நடத்துங்கள் .அட்லீஸ்ட் வாரத்துக்கு ஒருமுறை ஆவது படைப்பாளிகளோடு கலந்துரையாடுங்கள் .
இந்த தளம் இன்று உள்ள இணையங்களில் மிக active ஆக இருக்கும் no 1 படைப்பு தளம் .ஆனால் இதில் எந்த கட்டமைப்புகளும் இல்லை .அப்படி இல்லாத போது இது ஒரு வருவார் , போவார் இடம் தான் ஆகி விடும் .
வருவார் போவார் என்பது இங்கு எந்த படைப்பாளியும் நிலையாக எழுத மாட்டார்கள் என்பதை சொல்கிறேன் .
அப்படி நிலையாக எழுதுபவர்களுக்கும் இப்போது இங்கு உள்ள unorganised situation எந்த விதத்திலும் பலனில்லை .

உதாரணதுக்கு ஒன்று சொல்கிறேன் ...வேறு தளத்தில் இருந்து ஒரு தொடர் கதை திருடப் பட்டு இங்கே பதிவான போது
அந்த தளக் காரர்கள் 15 நிமிடத்தில் உங்களை தொடர்பு கொண்டு அந்த படைப்புகளை தூக்கினார்கள் .
எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்து இருந்தார்கள் .ஆனால் நாம் எங்கு இருக்கிறோம் ....

உங்கள் தொடர்ந்த தொடர்புகளால்தான் தளம் வளரும் , உங்களுக்கும் என்ன நடக்கிறது என்பது தெரியும் , இதில் உள்ள உறுப்பினர்களும் வளர்வர் ..இவை எல்லாம் சேர்ந்துதான் எழுத்து .காம் க்கு ஒரு அடையாளம் கிடைக்கும் .
அந்த அடையாளம்தான் உங்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் .இப்படி செய்வதால் பணமும் by default வரும் .

நீங்கள் இதை முழு மனதோடு , கட்டமைப்போடு செய்ய வில்லை என்றால் ஒரு நூறு பேரின் நேரத்தை வீணடிக்கும் இடமாக மட்டும் மாறி விடும் .இந்த நூறு பேர் போனால் அடுத்த வருடம் வேறு நூறு பேர் ..
உறுப்பினர்கள் அத்துனை பேரும் இயங்க வேண்டும் என்றால் மார்க் ஜுகேர்பெர்க் மாதிரி ஆக வேண்டாம் .அவன் செய்யும் விஷயங்களில் 5% செய்தால் போதும் .( முக நூலில் அவர் எப்படி இயங்குகிறார் ..உங்களுக்கு தெரிந்திருக்கும் ..பாருங்கள் )


அடுத்து நடுநிலையாளர்களுக்கு...

நடு நிலையாளர் என்பது ஒரு வருமானம் இல்லாத போஸ்ட் தான் . கவிதை தேர்ந்தேடுப்புக்கு மட்டும்தான் நினைக்கிறேன் .ஆனால் இங்கு எல்லோரும் புரிந்து கொள்வது உங்களை ஒரு பஞ்சாயத்து நாட்டாமை ஆக பார்க்கிறோம் .
நீங்களும் பெண் பிரச்சனை என்று வரும்போது பஞ்சயாத்தை கூட்டி சிறப்பாக தீர்ப்பு சொல்கிறீர்கள் .
ஆனால் மற்ற பிரச்சனைகளில் நீங்கள் தலையீடுவதெ இல்லை ..அப்படி தலையிட்டாலும் ..பெண் பிரச்சனைகளில் வாள் சுழற்றும் நீங்கள் ..மத சண்டைகளிலோ , போலி id தாக்குதல்களிலோ , ஆபாச பதிவுகளிலோ , தமிழ் , இந்திய துவேஷ பிரசங்கங்களிலோ பதித்தவரிடம் போய் கெஞ்சி கொண்டு இருக்கிறீர்கள் .

பெண் பிரச்சனைகளில் தண்டிக்கும் அதிகாரத்தை அனாயசமாக எடுக்கும் நீங்கள் மற்ற பிரச்சனைகளில் "மன்னிக்கும் "அதிகாரத்தை எடுத்துக் கொள்வது ....

நடுநிலையாளர் நிலைமையே இப்படி என்றால் இன்று எழுத வந்தவன் என்ன செய்வான் ?
அதனால் நீங்களும் கொஞ்சம் தளத்தை organised படுத்துங்கள் .

முழு நேர எழுத்தாளர்கள் , எழுத்தை தொழிலாய் கொண்டவர்கள் நடுநிலையாளராக இருத்தல் உசிதம் .அதுவே அவர்களுக்கும் , அனைவருக்கும் , தளத்துக்கும் நன்மை பயக்கும் .அவர்கள் இளைஞர்களாய் இருப்பின் இன்னும் நன்று .

அப்புறம், கடைசியாக விருது ...
ஒரு வருடத்துக்கு ஒரு ஐந்து விருது கொடுங்கள் .போதும் .அதுவே இலக்கியம் வளர்க்கும் .
விருது என்பது அடைய முடியாத ஒரு விஷயம் , அடைய பிரயத்தன பட வேண்டிய ஒரு விஷயம்
ஆனால் நீங்கள் ஒரு வருடத்துக்கு 100 பேருக்கு மேல் விருது கொடுக்கிறீர்கள் .
தளத்தில் வாரத்துக்கு வந்து ஒரு ஆஜர் போட்டால் விருது கிடைத்து விடும் .இதனால் படைப்பாளி வளர்வான் என்று நினைக்கிறீர்களா ?

விருது வழங்கும் விழாவில் விருதுக்கு உரியவர்கள் எல்லாம் மேடையில் உட்கார்ந்திருக்க பார்வையாளர் வரிசையில் யார் இருப்பார்கள் ? யோசித்து பாருங்கள் ...

கடைசியாக ....வளர்த்தவர்கள் கொஞ்சம் குருக்களாக இருங்கள் ..இன்னும் சிஷய்ர்காளாகவே இருக்காதீர்கள் .

நன்றி

நேசங்களுடன்

ராம் வசந்த்

- அபி சிறுகதை போட்டி , இன்னும் சில போட்டிகள் பரிசுகள் அனுப்ப மட்டும் மின்னஞ்சலில் பரிசு பெற்றவர்களோடு தொடர்பு கொள்வேன் . மற்ற படி ..

take care
bye
love you all ................

கருத்துரையை முடக்க வில்லை .அதனால் நீங்கள் கிழிக்கலாம் . நான் " மன்னிக்கும் " அதிகாரத்தை எடுத்துக் கொண்டு விடை பெறுகிறேன் .

எழுதியவர் : (2-Jul-15, 3:43 pm)
பார்வை : 336

மேலே