கடல் - காதல் பந்தம்

கடல் அலை வந்து என் கால்களில் மோதிய பொழுது
என்னுள் ஏற்பட்ட சிறிய தடுமாற்றமும்
காதல் என்னுள் வந்தபொழுது உணர்ந்த
அதிர்வும் ஒரே மாதிரி சுகமே

கடல் அலை
கடற்கரை மண்ணில் கரைந்து போவது போல்
என் காதல் என்னுள் கரைந்த பொழுது
ஆறுதல் அளித்தது இந்த கடல் தான்

கற்பனையை தூண்டி
வார்த்தைகள் கோர்த்து வரிகள் அமைத்து
காதல் கவிதை எழுதியதும்
இந்த கடலில் அமர்ந்து கடல் காற்றை உணர்ந்த பொழுதில்தான்

கடல் மண்ணில் அமர்ந்து
கடலை சாப்பிட்டு கடலை போடுவது
கடலுக்கும் காதலுக்கும் இடையேயான
பந்தத்தை சீர்க்கெடுக்கிறது

எழுதியவர் : jonesponseelan (2-Jul-15, 3:13 pm)
பார்வை : 243

மேலே