என் வாசிகசாலை

என் காதலன்
என் வாசிகசாலை

அவன் அறிவில்
மிக உயர்ந்தவன்
ஒழுங்கில் என்னை
கொள்ளை கொண்டவன்

அவனிடம் பல
பொக்கிஷங்கள் உண்டு
அதை அறிய எனக்கும்
உரிமையுண்டு

ஏனெனில் நான் அவன்
காதலி

வாரத்தில் ஒரு நாள்
அவன் தரிசனம்
எனக்குக் கிடைக்க
அது தான் என்
பொன் நாள்

ஆசையாய் அவன்
பொக்கிஷத்திலிருந்து பல
புத்தகங்கள் எனக்குத்
தருவான்

நான் அதன் ரசனையில்
லயித்து உலகம்
மறந்து இரவு பகல்
புத்தகத்தில் கிடப்பேன்

வாசிகசாலை புத்தகங்கள்
என் உயிராயிற்று
அதனால் வாசிகசாலை
என் காதலனாயிற்று

எழுதியவர் : fasrina (2-Jul-15, 3:06 pm)
பார்வை : 87

மேலே