மலரே

தேன் சுரக்கும் ரோஜாப்பூ
முன் பிறந்துப்போனால்..

வஞ்சம் அறியாத
வண்டென்ன செய்யும் .. ?

படிக்கட்டு வழியெல்லாம்
பூங்குழல் தடத்தால் ..

வடிகட்டு இல்லாத
நுரையீரல் கெட்டுபோகும்...!

ஜடைப்போட்டு நடைபோடும்
பூலோக பூவாய்...

கடைத்தெரு பூப்போல
எனை ஈர்க்கும் தேன்வாய்

வாடாமல் எப்போதும்
என்னுளே மலர்வாய்

வாடா எனும் நொடியில்
மொட்டொடிந்து சிரிப்பாய் ...


நிழலே ...
நித்திய மல்லியின் அஞ்சனமே ...

மலரே ...
மார்கழி பூக்கொண்ட குஞ்சலமே ...


இலவம் பூவே பர்க்காமல்போனால்
இளவேனில் காலமும் இலையுதிர்திடுமே!!!

அனிச்சம் பூ உன்னை அணைத்த நொடிகள்
வெளிச்ச நேரத்தில் வெட்கங்கள் தருதே ..

காந்தள் பூ மீது கொண்ட ஈர்ப்பு
காதல் வந்ததும் உன் பக்கம் திரும்பிட ...

தளவம் பிதிகம் குரவம் வகுளம்
யாவுமே தோற்றதடி..........!!!!!!


கூழங்கள் நெஞ்சம் கொண்ட புன்னை ..
கொளுவைத்தது போலே பரவசம் பெண்ணில் ...


பனித்துளியை கூட சுவையாக்கும் புழகு
பூக்களை கூட நிலவாக்கும் அழகே ..

நறுமணங்கள் என்றாலே சுள்ளி எனச்சொல்லி
வெட்சித்துறை போலே எனைகவர்ந்து போனாய் ..

கருவளையம் சூழ் கொண்ட கருவிளம் உன்மேல்
ஈங்கை பூக்காரனை பித்துபிடிக்க செய்தாய் ..



நிழலே ...
நித்திய மல்லியின் அஞ்சனமே ...

மலரே ...
மார்கழி பூக்கொண்ட குஞ்சலமே...

எழுதியவர் : ராம்குமார் (2-Jul-15, 2:53 pm)
Tanglish : malare
பார்வை : 78

மேலே