என்றென்றும் அழியாதது

மனதிற்குப் பிடித்தவ ருடன்நட்பு கொள்ள
ஒருகண நேரம் நமக்குப் போதுமே;
கண்களும் கண்களும் கலந்துகாதல் கொள்ள
ஒருநொடி நேரம் நமக்குப் போதுமே;
உள்ளத்தின் உள்ளார்ந்த நட்பை, காதலை
உதறயென் வாழ்நாளில் முன்னேற முடியுமோ!!
வேண்டும் என்றென்றும் நிலைக்கும் அழியாத
நிலையான உன்அன்பு நிறைநட்பும், காதலுமே.