அன்னை
ஓர் மதிய வேலை அலுவலக தொலைபேசி அழைப்பு! எதிர் முனையில் இருந்த குரல் உங்கள் அன்னையின் உடல்நிலை சரி இல்லை என்று.......
பதரியவனாய் எப்போது என்று கேட்டேன் அவர்கள் இன்று காலை முதல் என்றார்கள்... வருகிறேன் என்று இணைப்பை துண்டித்தேன்........
அடுத்த அழைப்பு என் மனைவியின் குரல்,... உங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாம்! போன் வந்தது என்றாள்,,.... உங்களுக்கு போன் செய்தார்களாம்! நீங்கள் எடுக்க வில்லை என்று எனக்கு தொடர்ப்பு கொண்டார்கள் நான் உங்கள் அலுவலக எண்னை கொடுத்தேன் பேசினார்களா? என்றாள்.... ம்ம்ம் என்றேன்!...
சீக்கிரம் வாங்க பார்த்துவிடு வரலாம் என்றாள்....... ம்ம்ம் என்றேன்......
அன்னையை பார்க்க என் இரு குழந்தைகளுடன் சென்றேன் அவளை சேர்த்த முதியோர் இல்லத்திற்கு,..... என் வரவை கண்டதும் அவள் கண்களில் ஆனந்த கண்ணீர். என் பிள்ளைகளை பார்த்ததும் கட்டி தழுவி முத்தம் இட்டால்..... அவள் உடம்பு சரியில்லை என்பதை மறந்து,...... அன்று இரவு வரை அவளுடன் இருந்து விட்டு வீட்டிற்க்கு பயணம் ஆனோம்..... என் பிள்ளைகள் பாட்டியை எப்போது அழைத்து வருவாய் என்ற வினாக்களுடன் பயணப்பட்டன.
மறுநாள் அலுவலகம் பயணிக்கும் போது, தெருவோரத்தில் ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவு கொடுத்து கொண்டிருந்தாள்... அதை பார்த்ததும் என் அன்னையின் நியாபகம்!!!!!.......
என் குழந்தை பருவத்தில் அவளை நான் படுத்திய பாடு. அதனால் அவளின் எத்தணை தோழிகளை இழந்தால் என்று நினைக்கும் போது வெட்கமாக வந்தது. நான் செய்த குறும்ப்புக்காக எத்துணை பேரை சமாளித்தாள்.
என் பிள்ளை என் பிள்ளை!
என்று மடியில் தூக்கி திரிந்தவள்.....
அனாதையாய் ஆனாலே!!
யாவும் இருந்தும்,
யாதும் இல்லாதவள் ஆனாள்.....
இது அனைத்திற்கும் காரணம் என் முன் கோபம் மட்டும்தான்!!!
ஒரு மாதத்திற்கு முன் ஓர் நாள் அலுவலக பணி சுமை காரணமாய் விரக்கித்தியுடன், கோபத்துடன் வீடு வந்தேன். என் அன்னையும், மனைவியும் எதோ ஓர் கருத்து வேறுபாடுடன் சண்டையிட்டு கொண்டனர். அது சாதாரண சண்டைதான் என் பணி சுமை களைப்பால் அவர்கள் இருவரையும் திட்டிவிட்டு என் அறையில் போனேன். என் அன்னை என் அருகில் வந்து என்ன ஆச்சி என்றாள்!!!!..... என் மனைவி அன்னையின் அருகில்..... என் பணி சுமை மன இறுக்கம், இவை என் நிதானத்தை இழந்து ஒன்றும் இல்லை நீங்கள் இருவர்தான் பிரச்சனை என்றேன்.. என் மனைவி அவள் கோவத்தை காட்டி சென்றாள் சமையல் அறைக்கு!.... என் அன்னை மட்டும் என் அருகில் இருந்து என்னை வேண்டும் என்றால் முதியோர் இல்லத்தில் விட்டுவிடு என்றாள் நான் சொன்ன அந்த ஒற்றை வார்த்தைக்காக!!!... என் மனமும் அதற்க்கு இசைந்தது......
ஏன் என்றாள்
அன்னையின் தேவை
மனைவி வந்ததும்
தேவை இல்லை என்றாகியது..... மறுநாள் என் அன்னையை எனக்கு தெரிந்த முதியோர் இல்லத்தில் சேர்த்தேன்..... என் பிள்ளைகள் வேண்டாம் என்று தடுத்தும்! என் மனைவி வேண்டாம் என்று தடுத்தும்! சேர்த்து விடு வந்தேன்......
என் அன்னை இருந்த நேரத்தில் வீட்டில் எதோ ஓர் சந்தோசம் இருந்தது போலும் இப்போது அது இல்லாத போலும் இருந்தது என் குழந்தைகளின் நடவடிக்கைகளால்...... அன்னையை அழைத்து வர முடிவெடுத்தேன்.....
அலுவலகம் செல்லாமல்! நேரே முதியோர் இல்லத்திற்கு சென்று என் அன்னையை என் கடமையை செய்ய அழைத்து வந்தேன்............
என் வீடு இப்போது அழகாய் தெரிவதாய் என் மனம் சொல்லியது......
-மூ.முத்துச்செல்வி