அழகோ கவியோ

பூவின் மேல் படர்ந்த வண்டுகளோ
புல்லின் மேல் படர்ந்த பனி துளியோ
வெள்ளி குடம் போன்ற வெண்ணிலவோ
அது விழுந்து முகம் பார்க்க நீர் அருவியோ
வண்ண பறவையோ சின்ன பூச்சியோ கோல மயிலோ
கதிர் பாயா கானகமோ அதில் கதிர் பாய கண்டது கவியோ ..

கட்டழகு கன்னியோ
அவள் வட்ட முகம் நிலவோ
செதுக்கி வைத்த சிற்பமோ
அவள் சில்லென்ற தென்றலோ
பட்டு தாமரையோ
அவள் பார்த்தவுடன் மின்னலோ
வர்ணனைகளில் காதல் வளர்த்தது கவியோ ....

சளைத்தவனோ இளைத்தவனோ
அவன் சகலமும் சகிக்கும் சாமாநியனோ
சாதியோ பிரிவோ அதில்
மூழ்கி தொலைத்தது மனிதமோ
தாழ்ந்தவனோ உயர்ந்தவனோ
அதை தொடங்கி வைத்தவன் உயர்ந்தவனோ
இருள் படர்ந்த சமூகமோ அதன் இருள் நீக்க கண்டது கவியோ ...

சொட்டு சொட்டாய் விழும் மழையோ
அது கொட்டி விட்டு போனது கவியோ
வீசி சென்ற தென்றலோ
அது விட்டு விட்டு போனது கவியோ
மரமோ செடியோ பற்றி படர்ந்த கொடியோ
இயற்கையோ பேரெழிலொ
அதன் எழில் எடுத்துரைக்க வந்தது கவியோ ..

எழுதியவர் : midila (4-Jul-15, 9:43 pm)
Tanglish : alago kaviyo
பார்வை : 81

மேலே