எனக்கு நீ சிறப்பானவள் - வெண்பாக்கள்
இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்
அன்புள்ள அன்னையே உன்னறி யாவயதில்
உன்முதற் பிள்ளையாய் என்னையே – உன்கருவில்
நீசுமந்து பெற்றாயே; உன்வலி நானறிவேன்.
பேசுவேன் உன்பெருமை நான்! 1
பல்முளைக்கும் நாள்வரை பாலூட் டிவளர்த்தாய்;
தொல்லைகள் நான்கொடுத்தும் தூரப்போ – கொல்லையில்
கட்டிவைப்பேன் என்னாது காத்துவந்தாய் கண்ணாக;
அட்டியேதும் உண்டோ அதற்கு! 2