என்னை திட்டுங்கள்

குறைந்தபட்சம்
என்னை திட்டுங்கள்,

உங்களின் தற்போதைய நொடிகளை
விரயமாக்கிக்கொண்டிருக்கின்றேன்
நான்

எதற்காய் திட்டவேண்டும் ?
என்ற கேள்விகளுக்கான பதிலை
மவுனத்தினூடே
இருத்திக்கொள்ளுகின்றேன்

என் கற்பனைகள் விலை போவதில்லை
தெரிந்தும்
கவிதை படைக்க முயலுகின்றேன்

வேண்டாம் என்ற
கூச்சத்தை கொன்று
என் பேனாவிற்கு மை இடுகின்றேன்

பல கவினர்களின் வாசனைமிகுந்த
கவிதை பூஞ்சோலைக்கு மத்தியில்
ஒரு வாசனையற்ற
மலருக்கான விதையை
நடுகின்றேன்

திசைகள் அறியாமல்
ஒரு பயணத்தை
ஓட்டை படகுடன் தொடங்குகின்றேன்
கவிதை நாடி ....

எழுது, வேண்டாம்

என்ற இரு கூறிய கத்திகளுக்கிடையே
விழி பிதுங்கி நிற்கின்றேன்,

ஏதோ ஒன்றை செய்துவிட்டு
நம்மிடம் பாராட்டை
எதிர் பார்க்கும்
ஒரு மழலைக்கு நிகராய்...

பாராட்டுகளுக்கு நான்
சொந்தமானவன் அல்ல,

குறைந்தபட்சம் என்னை திட்டுங்கள் தோழர்களே !

எழுதியவர் : சிவப்பிரகாசம் (4-Jul-15, 8:20 pm)
பார்வை : 137

மேலே