நினைவே போதும்

பிறக்காத குழந்தைக்கும்
நம்பெயர் இணைத்து
பெயர்வைத்து மகிழ்ந்தோம்.!
நடக்காத திருமணத்திற்கும்
நாட்கள் எண்ணி கொண்டாடினோம்.!
இன்றோ உன் குழந்தைக்கு
என் பெயரும்.!என் குழந்தைக்கு
உன் பெயரும் ஆனதே.!
அன்று என்கைகள் உனக்கு ரோஜா
மலரை கொடுக்காதிருந்தால்.!
இன்று என் மனம் முள் தைத்ததாய்
துடித்திருக்காது.!
அன்று என் இதயம்
உதிரத்தால் காதல்மடல் எழுத
மறுத்திருந்தால்? இன்று என்
கண்ணீர் காதல்காவியம் எழுத
துணை சென்றிருக்காது.!
உன் புன்னகையை எதிர்கொள்ளும்
துணிவு அன்று என் மனதிற்கு
இருந்திருந்தால்?இன்று உன்
நினைவின் வலியை எதிர்த்து
நின்றிருக்குமோ.!
வயது என்ற பயணத்தில்
ஆணுக்கு மட்டும் ஏன்?
ஒரே வயதில் இருவேறு
பாதைகள்.?காதல்.!! கடமை.??
ஒரே கையில் காற்றையும் நீரையும்
வைத்து ஒன்றை மட்டும் எடுக்க
சொல்வது நியாயமோ.??
விதி என்று விரும்பி ஏற்பதா.?
மதி என்று மனம் நோவதா.?
எனக்கான மருந்து நீதான் என்று
தெரிந்தும் உண்ண மறுக்கிறேன்.!
என் குடும்பத்திற்காக.!
கையில் அவள் நினைவு பருக்கை ஒட்டியிருக்கையில் காதல்காகத்தை
விரட்டினால் பறக்குமோ.??
இன்று என்னிடம் இருப்பதெல்லாம்
கையில் உன் நிழற்படமும் நெஞ்சில்
உன் நிஜபடமும் தான்.!
உன் நினைவே போதும்.....