மனம் கவர்ந்த மாய கன்னி

மனம் கவர்ந்த மாய கன்னியே...
தினம் நான் ஏங்கினேன் உன்னை எண்ணியே...
குணம் என்ற சொல்லில் உயர்ந்த மோகினியே...
தனம் என்னை சேரும் உன் நலம் பேனியே...

அழகே...
ஆருயிரே...

கடல்கறையில் என் காதினருகில் முத்தம் கொடுத்தாய்....
எனது செவிகளிலே இன்னிசை ஓலமிட்டாய்...
என் உள்ளத்தின் வாசலிலே அழகிய கோலமிட்டாய்...

மலை பிரதேசத்தில் உன் மார்பென்னும் சிறையில் என்னை அடைத்தாய்....
சோலை என்னும் அழகிய சேலை உடுத்தினாய்...
கண்ணிற்கு இனிய காட்சிகளை பல கொடுத்தாய்...

பாலை என்னும் ஊரிலே எனக்கு பகுத்தறிவு அளித்தாய்...
கானல் என்னும் மாய பெண்ணின் உருவத்தை வர்ணித்தாய்...
நீயின்றி வேறோருத்தியும் உண்மையல்ல என்பதை உணர்த்தினாய்...

வனம் என்ற உலகிலே பல வர்ணம் தீட்டினாய்...
உயிரின் உன்னதம் நீதான் என்பதை தெரிவித்தாய்...
நீயின்றி எனக்கு வாழ்வில்லை என்பதை அறிவித்தாய்...

ஆம் பெண்ணே...
எங்கும் எழில் பொங்கி காணப்படும் இயற்கை கன்னியே...
என் வாழ்வென்னும் கடலுக்கு நீதான் தோணியே...

எழுதியவர் : அருண் கார்த்திக் (5-Jul-15, 6:36 pm)
பார்வை : 336

மேலே