அறம்

அறம் அதனை காப்பியத்தில் கண்டேன்,
அறிமுகம் செய்யவில்லை- நடைமுறையில் இதுவென்று.
மரம் போல்வர் மக்கட்பண்பில்லாதவர்- என்றான் வள்ளுவன்
ஆம் நடமாடும் மரங்கள் தான் மானுடத்தில் அதிகம்
மனம் கொன்று வாழும் மனிதா!
மரணத்தின் கணம் தெரியுமா?
அறம், பொருள், இன்பம், எல்லாம் காப்பியத்தில் கண்துகில்கின்றன .
காப்பியங்களோ! நூலகத்தில் சிலந்திவலையில் சிறைபிடிக்கபட்டன .
அதை கற்றறிந்த சான்றோரோ!
தகுதியான இடமில்லாமல் ஓரங்கட்டப்பட்டனர்
உ வே சா வழிநெடுக கால்கடுக
கண்டெடுத்ததெல்லாம்
வாசிப்பார் அற்று வைத்திடலாமோ - இவர்
வழித்தடத்தில் காணாத எவற்றை
வலைதளத்தில் கண்டிடுவீர்
''அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் '' என்றான்- இளங்கோ
'பிழையும் கூத்துமாய்'' போன அரசியலால்
பிழைப்போரை -என் செய்வானோ?

எழுதியவர் : இராம கிருஷ்ணன் .வெ (6-Jul-15, 4:56 pm)
பார்வை : 1890

மேலே