வெற்றி உனதே

2011 ல் புதுக் கவிதை

சிங்கம் சோம்பேறி ஆனால்?
சிறுத்தையும் சிங்கம் தான்,
சீறவும் செய்யும் தான்;

ஆதலினால் சோம்பல் தவிர்,
சிங்கம் போல் மாறு, செயலில் இறங்கு,
வெற்றி உனதே.

2015 ல் மரபுக் கவிதை

வெற்றி உன்னைச் சேருமே! - ஆசிரியத்தாழிசை

சிங்கம் சோம்பேறி ஆனால்?
சிறுத்தையும் சிங்கம் தானே!
சீறவும் செய்யு மன்றோ! 1

ஆதலினால் சோம்பல் தவிர்த்துவிடு,
சிங்கம்போல் மாறிசெய லில்இறங்கு,
வெற்றி உன்னைச் சேருமே! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-15, 9:23 pm)
Tanglish : vettri unathe
பார்வை : 820

மேலே