கனவுத்தோழி

என் கண்களை மூடும் போது
எண்ணற்ற கனவுகளின் தோன்றுதலில்
ஏதோவொரு எதேர்சியான திரும்புதலில்
என் கண்ணில் பட்டவளே!

பிரமன் தன் படைப்பில் பிரமித்து
பித்தனாகிய அபூர்வ அழகிய -நீ
ரவிவர்மன் ஓவியங்கள் போல்
ரவிக்கை கட்டிய மொழுகு சிலையோ?

இந்திரலோக தாரகைகள் இல்லாமல்போகும்
இயந்திரலோக நாயகியோ ?
சந்திரனில் வாழப்போகும்
சரித்திரப் பெண் -நீதானோ!

அழகிற்கு நிலவை ஒப்பிடும்
அனைத்துலக புலவர்களும்
உனைப் பார்த்தால் அதை மறந்து
உன்னை ஒப்பிடுவார் அனைத்துக்கும்

அழைப்பதற்கு பேர் சூட்ட அனைத்து அகராதியும்புரட்டிவிட்டேன்-உன்
அழகிற்கு பொருந்தும் பெயரில்லை
அல்லாடிப் போனேன் நானின்று

இரவின்றி பகலிலும் தூங்குகிறேன்
இடைவிடாது உன்னழகை ரசிப்பதற்கு
கனவுத் தோழியே உன் எழிலை
கவிபாட வார்த்தையில்லை இவ்வுலகில்

நித்தம் உன் வரவிற்காய்
இமையோடு இமை மூடி
இமைக்காமல் காத்திருக்கிறேன்
இனிய என் தோழியே உன்நினைவில்..........

எழுதியவர் : வேலணையூர் சசிவா (7-Jul-15, 6:37 pm)
பார்வை : 102

மேலே