அவள் பெயர்

'ந' - வுக்கு முன்எழுத்தாய்,
என் நாவுக்கு முதல்எழுத்தாய்..
'ஈ'- எனும் உயிரோடு சேர்ந்த மெய்யாய்,
என் மெய்யோடு சேர்ந்த உயிராய்..
'வெண்பா' - வின் இறுதியாய்,
என் வெண்ணிலாவின் பெயர் முடிவாய்..
என்னவள்..

'தீ'-யில் தொடங்கும் பாவை,
மறக்க நினைத்தால்
தீயாய் பரவும் பார்வை..

அவளை
நேற்று தொலைத்தேன்
இன்று தேடுகிறேன்
நாளை உண்டு என்ற நம்பிக்கையுடன்..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (7-Jul-15, 6:51 pm)
Tanglish : aval peyar
பார்வை : 73

மேலே