எனது இரவுகள் - உதயா
ஊரே உறங்கும் வேளையில்
நான் மட்டும்
தவித்துக்கொண்டிருக்கிறேன் ...!
ஓயாத காற்றைப் போல
உறங்கி விழிக்காத கல்லைப் போல
நட்ட நாடு இராத்திரியிலும்
கதறிக் கொண்டிருக்கிறேன் ...!
எவன் எவனோ
எவள் எவளோ
நூறூ ஆண்டிற்கு மேலும்
வாழ்ந்துக் கொண்டிருக்க
என்னவளை மட்டும்
விரைவில் அழைக்கும்
அந்த எமனை
சபித்துக் கொண்டிருக்கிறேன் ...!
எதற்கு எதற்கோ
மருந்துகளை கண்டுபிடித்தும்
என்னவளின் நோயிற்கு மட்டும்
இன்னும் மருந்தை கண்டுப் பிடிக்காத
மருத்துவர்களை பித்தனாக
திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறேன் ...!
நாள்தோறும் அவள்
இரவு இரண்டு மணிக்கு
என்னை அலைப் பேசியில் அழைத்து
மாமா தலை வலிக்குது
பயங்கரமா வலிக்குது
என்னால தாங்கவே முடியில
மாமா நான் உன்ன விட்டு
போயிடுவேனா ?
நான் போக மாட்ட
நான் என் மாமா கூட தான் இருப்ப
என் உதய் கூட தான் இருப்பேனென
அவள் கதறி அழும் போது
என் வீட்டு வேப்ப மரத்தில்
கூடு கட்டியுள்ள காக்கை குஞ்சுகளும்
என்னுடன் சேர்ந்தே
கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது ...!
சிறிது நேரத்திலே
மாமா நான் நல்லா இருக்கேன்டா
நீ எதுக்கு அழுற
இங்க பாரு உன் பொண்டாட்டி
சிரிக்கிறேன் என
அவள் என்னை சமாதனப்படுத்தும் போது
நானோ நெருப்பில் விழுந்த
புழுவாக துடித்துக் கொண்டிருந்தேன் ...!
அவளோ
என் மேல் கொண்ட
காதலிலும் அன்பினிலும்
பரந்த சமுத்திரத்தையும்
உயர்ந்த வானினையும்
சிறு புள்ளியாக்கி
அதனை தாண்டிச்
சென்றுக் கொண்டிருந்தாள் ...!
ஒவ்வொரு இரவிலும் இவ்வுலகமே
மீண்டும் கண் விழிப்போம் என்ற
நம்பிக்கையிலே உறங்குகிறது
ஆனால் நானோ
என்னவள் என்னை
மறுநாள் காலை ஆறு மணிக்கு
அலைப் பேசியில் அழைப்பாளோ ?
இல்லை அழைக்க மாட்டாளோ ?
என்ற அச்சத்துடனே இரவு முழுவது
அலைப் பேசியை பார்த்தவாறே
துடித்துக்கொண்டும்
பதறிக்கொண்டும்
நடுங்கிக்கொண்டும்
கொஞ்சம் கொஞ்சமாய்
செத்துக்கொண்டும்
காத்திருக்கிறேன் ...!