நான் மோட்சம் அடைந்துவிட்டேனா ~ செல்வமுத்தமிழ்
இரண்டு ஆண்டுகளின்
வறண்ட நாட்களைப்போல்
இன்றும் ...
வழக்கம்போல்
அதே பேருந்துப்பயணம் ,
வழக்கம்போல்
அவள் மீது என் விழிகள் ,
வழக்கம்போல்
விரதத்தில் அவள் விழிகள் ,
வழக்கம்போல்
நான் நிலவை நீங்க தயாரானேன் ,
வழக்கம்போல்
அவள் எனைக் கடந்தாள் ,
ஆனால் என்னால்
வழக்கம்போல்
நடக்க முடியவில்லை ,
என் கால்களைத் தேடினேன்
அவை நிலத்தில் இல்லை
ஏனென்று சிந்திக்கும் முன்
திடீரென்று நான் பறக்கலானேன்
இதுவரைக் காணாத
எழில் கோளம் புகுந்தேன்
வாயில் பலகை கண்டு
ஆச்சரியத்தில் உறைந்தேன்
அதில் “சொர்க்கம்” என்று செதுக்கப்பட்டிருந்தது
என்னால் நம்பமுடியவில்லை
நான் மோட்சம் அடைந்துவிட்டேனா ???
இப்போதுதான்
எனக்கு நினைவுக்கு வருகிறது
என் தேவதை
இன்று எனைக் கடக்கையில்
என்னிடம் ஏதோ சொன்னாள்
ஆம் தன் காதலைச் சொன்னாள் !!!