மொழியில்லாக்கவிதை
அன்று காலை நேரம் , இடம் : பம்பாய் ரயில்நிலையம் ,
ரயில்களின் சத்தம் , பாதசாரிகளின் கூச்சல் ,
அந்த இடத்தில் கைகளில் மஞ்சப்பையும் ,
கண்களில் ஏக்கத்தையும் சுமந்து கொண்டு ஒரு சிறுவன் ,
வரும் போகும் பயணிகளிடம் அய்யா அந்தேரிக்கு எப்போ ரயில் வரும் என்று கேட்டுக்கொண்டு இருந்தான் ,
அங்கு யாருக்கும் தமிழ் தெரியாததால் , இவனை யாரும் கண்டுகொள்ளவில்லை .
அந்தநேரம் தமிழில் ஒரு ஒருகுரல் ,அங்கு உள்ள உணவு விடுதியில் ,
கடைக்காரர் பயணியிடம் சண்டைபொட்டுக்கொண்டுஇருந்தார்,
அதை கேட்ட அந்த சிறுவன் ,சிரிப்போடன் ஓடிச்சென்று
அன்ன அன்ன நீங்க தமிழ்லா என்று கேட்டான் .
கடைக்காரன்: ஆமா தம்பி , நீ யாரு உனக்கு என்ன வேணும் .
சிறுவன்: எ பேரு சந்துரு , இங்க அந்தேரிக்கு எப்ப ரயில் வரும் .
கடைக்காரன்: அன்தேரிக்கா?, அந்தேரிக்கு இங்க ரயில் வராதே , ஆமா உன்கூட யாரும் வரலிய .
சிறுவன்: அப்பா வெளில நிக்கறாரு , அப்பாதான் என்ன கேட்டுட்டு வரசொன்னாரு.
கடைக்காரன் : ஒ.. அப்பிடியா , இங்க இருந்து ரோட கிராஸ் பண்ணி போன பக்கத்து ரயில்வேஸ்டேஷன் , அங்கதான் அந்தேரிக்கு ரயில் வரும் .
சந்துரு : ரொம்ப நன்றி அன்ன ....
என்று சொல்லி ஓட்டம் பிடித்தான் ,
எப்படியோ அந்தேரி செல்லும் ரயிலை பிடித்து , தன் பையை இருக்க கட்டிக்கொண்டு ,கழிவறை முன்பு அமர்ந்து பிரயாணித்து கொண்டிருக்கிறான் .
அங்கு அவன் அருகில் பிச்சை எடுக்கும் ஒரு குடும்பம் இருந்தது.
அதில் அப்பா நன்றாக குடித்துவிட்டு , அம்மாவிடம் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறான்.
அதை கண்ட அந்த சிறுவனின் கண்களில் வலிந்த நீர் உள்ளத்தில் பட்டு , தூங்கிக்கிடந்த ஞாபகத்தை எழுப்பியது .
----------------------------------------------------
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ....
கோவையில் உள்ள ஒரு சிறுகிராமம் , எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று வயல்கள் ,
சந்த்ருவிற்கு அப்பா அம்மா மற்றும் ஒரு அண்ணன் பெயர் ரகு.
மகிழ்ச்சியான கொடும்பம் , ஆனால் அவன் அப்பா கொடும்பத்தை விட கொடிபோதையை நேசிப்பவர், இருப்பினும் நல்லவர் .
அன்று ஊர் திருவிழா அனைவரும் மகிழ்ச்சியாக சுற்றித்திரின்தனர் .
சந்துருவின் அப்பா நன்றாக குடித்துவிட்டு , வீட்டு வாசலில் விழுந்து ரகு சந்துரு என முனங்கிக்கொண்டு இருக்கிறார் .
அவர் மற்றும் அவரது தம்பி இல்லமும் பக்கம் பக்கம் ,அவர் தம்பிக்கு இரண்டு மகள்கள் ,வசதியான குடும்பம் .
சித்தப்பாவீட்டில் இருந்து வந்த சந்துரு , அப்பா விடம் வந்து என்னப்பா , என்று கேட்டான் .
அப்பா : சந்துரு அப்பா வோங்களுக்கு ஒன்னு வாங்கிட்டு வந்துருக்கே ,
என்று சொல்லி தன கையில் வைத்திருந்த பையில் இருந்து ஒரு கார் பொம்மையை எடுத்து , ஏதோ ரகு கேட்ட ரிமோட்கார்..
இதை நீயும் உன் அண்ணனும் சண்டபோடம வேலயடுங்க, என்று சொல்லி அதை சந்துரு கையில் கொடுத்தார் .
சந்துரு : அதை கையில் எடுத்து அன்ன அன்ன .. டே ரகு ...
என்று தன் இருக்கும் இடத்திற்கு சென்றான்
ரகு: என்ன டா ...
சந்துரு: அப்பா என்ன வாங்கிட்டு வந்திருக்காங்க தெரியுமா ரெமொடேகார் ...
ரகு : அதா குடுடா .. நாந்தான் அப்பா கிட்ட கேட்டேன் ,
என்று சொல்லி இருவரும் சண்டை கட்டி , கடைசியில் ரகு அதில் வென்றான் ...
சந்துரு: அழுதபடி ... அம்மா அம்மா ..
அம்மா : என்ன டா .
சந்துரு: ரகு என்ன அடிச்சு ரெமொடேகார புடுங்கிட்டான் ...
அம்மா : அட போடா , நானே உங்கப்பன் திருவிழா நாளும்மா ,குடுசிட்டு விழுந்து கேடகநேன்னு இருக்க , இதுல நீ வேற...
சந்துரு : பொம ... அப்பா அப்பா ...
என்று அழுது கொண்டே ஓடினான் ..
அன்று இரவு ரகு தூங்கிக்கொண்டு இருக்கும்போது , சந்துரு அந்த ரிமோட் காரை ,எடுத்து
பரண்மேல் போட்டுவிடுகிறான் ,
ஒரு நாள் சந்துருவின் அப்பா , குடிபோதையில் ஏற்பட்ட சண்டையால் மரணமடைந்தார் ..
பிறகு மிகுந்த கஷ்டத்துடன் அம்மா அவர்களை வளர்த்து வந்தால் ..
-----------------------------------------------------------------------------------------------------
சந்த்ருவிற்கு சட்டென்று தான் ரயிலில் பிரயாணிப்பது நினைவிற்கு வந்தது ..
அந்தேரி ரயில்நிலையம் வந்ததும், அவன் இறங்கி மிகுந்த பசியுடன் நடந்து வந்தான் .
அங்கு உள்ள ஒரு வண்டிக்கடையை அடைந்து , தன பையில் இருந்து பாத்துருபாய் நோட்டை கொடுத்து இட்லி என்று கேட்டான் .
கடைக்காரர் புரியாத மொழியில் பேசி ,ஒரு தட்டில் உரண்டை பிடித்த கலியை கொடுத்தார் ,
அதை வாங்கிய சந்துரு , மறுமடியும் அவன் நினைவுகள் ......
----------------------------------------------------------------------------------------------------------------------
சந்துரு: இன்னைக்கு சாப்பிட என்ன , எனக்கு பசிக்கிது ..
அம்மா : ஒன்னும் இல்ல டா வெறும் களிதான் .
சந்துரு: போமா இது எனக்கு வேண்டா , எனக்கு இட்லி தான் வேணும் .
அம்மா : இல்லடா , அம்மா கிட்ட காசு இல்ல .
சந்துரு: நேத்து மட்டும் , ரகு கேட்டான்னு சப்பாத்தி செஞ்ச ...
அம்மா: இன்னைக்கு சாப்பிடு நாளைக்கு உனக்கு செஞ்சுதறேன் ....
என்று சொல்லி இருவரையும் சபிடவைத்தால் ...
அம்மவிர்க்கோ உடல்நிலை மிகவும் சரியில்லை , மருந்து வாங்க போதிய பணமும் இல்லை ,
ஒரு மாலை பொழுதில் ,
சந்துரு: ரகு ரகு
ரகு: என்ன டா ...
சந்துரு: சித்தப்பா வீட்ல பாணி பூரி வாங்கிட்டு வந்திருக்காங்கடா , வாபோய் சாப்பிடலாம் ,
ரகு:நா வரல நீ வென போ ....
சந்துரு:டே வாடா ... நீ வந்தேனா அன்னைக்கு அப்பா வாங்கிட்டு வந்த ரெமொடேகார் , அதா உனக்கு எடுத்து தருவே...
ரகு:ரெமொடேகாரா .... நீயா வச்சுருக்க ..சரி வா போலாம் ....
சித்தப்பா: நல்லவராக இருந்தாலும் , தன மக்களுக்கு பிறகுதான் மற்றவர்கள் என்ற எண்ணம் உடையவர் . அவர் வீட்டில் எங்களுக்கும் இரண்டு தட்டை வைத்து , அதில் உணவை பரிமாறினால் சித்தி ...
சந்துருவும், ரகுவும் , ஆசையுடன் அதை சாப்பிட நினைக்கையில் , ஒரு குரல் ..
சித்தப்பா:டேய்...என்ன பண்றிங்க .. கொஞ்சம் பொறு என்பொண்ணு சாப்பிட்ட பிறகுதான் சாபிடவேனும் .... அதுவரை அவளை வேடிக்கை பாருங்கள் என்று சொன்னான்
ரகு: உண்ணும் ஆசையைவிட உணர்ச்சிமிகுதியால் , சந்துரு நீயே சாப்பிடு என்று சொல்லி ,வெளியே சென்றான் ...
சந்துரு:சித்தப்பாவின் மகள் சாப்பிடும்வரை , காத்திருந்து அந்த உணவை சாபிட்டான் .
பிறகு மெல்ல , ரகுவிடம் வந்து ... டே இந்த என்று சொல்லி தன் கையிலிருந்து ,ஒரு பூரியை ரகுவிற்கு கொடுத்தான் ,
ரகு: எனக்கு இதெல்லாம் வேண்டாம் நீயே சாப்பிடு , ரெமொடேகார் எங்கே என்று கேட்க
சந்துரு சிரிப்புடன் ஓடிவிட்டான் .
அம்மாவின் உடல்நிலை மோசமடைந்து அவளும் இறக்க நேரிட்டது ...
பிறகு இருவரும் சித்தப்பாவின் பராமரிப்பிற்கு வந்தனர் ,...
ரகுவிற்கும் சித்தப்பவிர்க்கும் என்றும் ஒத்துப்போகாது ...
இருவரையும் வளர்க்க அவரிடம் வசதியில்லை ...எனவே ஒருவரை தத்துக்கொடுக்க முடிவுசெய்தார் சித்தப்பா ....
அவருக்கு தெரிந்தவரிடம் பேசி , பம்பாயில் உள்ள ஒரு செல்வந்தர்க்கு விற்க சம்மதித்தார் .
அன்று காலை ரகுவும் , சந்துருவும் பள்ளிக்கு புறப்பட்டுகொண்டு இருந்தனர் ....
சித்தப்பா: ரகு ...
ரகு: என்ன சித்தப்பா ...
சித்தப்பா:நீ இன்னைக்கு பள்ளிக்கு போகவேண்டாம் .
ரகு:எதற்கு என்று தெரியாமல் , சரி என்று சொன்னான் ....
சந்துரு பள்ளிக்கு சென்றபிறகு ராகவி அழைத்து ...
சித்தப்பா: ரகு உன்ன சித்தப்பனால வளர்க்க முடியல ,
ஒரு சார் உன்ன உன்ன வீட்டுக்கு குட்டிட்டுபோய் வளர்க்கறேன்னு சொல்றாரு ...
நீ என்ன சொல்ற ,,,,
ரகு: சரி சந்துரு வந்ததும் நாங்க போறோம் ...
சித்தப்பா: சார் உன்னமட்டும்தான் கூப்பிட்டாரு ...
ரகு: நான் போக மாட்டேன் ...
சித்தப்பா: நீ போகாட்டி உன்னையும் , உன் தம்பியையும் ,.. வீட்ட விட்டு தொரத்திவிற்றுவ ...
அப்பறோம் சாப்பாட்டுக்கு பிச்சத எடுக்கணும் ,
சொல்லு நீமட்டும் பொரிய இல்ல ரெண்டுபேரும் பிச்சை எடுக்கரிங்கள ...
ரகு: கண்ணீர் வழிய சம்மதம் தெரிவித்தான் ...
சார் வந்துவிட்டார் ..
சித்தப்பா: சார் பையன பத்தரம பாத்துக்கோங்க ....
சார்: நீங்க ஒன்னும்கவள படாதிங்க . இது என் விலாசம் ,
நீங்க எப்போவேணாலும் வரலாம் ,
என்று சொல்லி ரகுவை அழைத்துச்சென்றார் ,
சந்துரு:மாலை பள்ளி முடிந்து , வீட்டிற்கு வந்து , ரகுவை தேடினான் , சிறிது நேரம்கழித்து ,
சித்தி இடம்வந்து ...
சந்துரு: சித்தி ரகு எங்கே ....
சித்தி: போ உன்சித்தப்பவையே கேளு ..
சந்துரு: சித்தப்பா ரகு எங்க காணோம் ..
சித்தப்பா: ரகு வேரவீட்டுக்கு போய்ட்டான் ..
சந்துரு: ஏ போய்ட்டான் ...
சித்தப்பா: ஒரு சார் , அவன நல்ல படிக்கவைகறேன்னு சொன்னாரு அதா போய்ட்டான் ...
உணர்சிகளை காட்ட அவனுக்கு வழியில்லை , எட்ட்ருக்கொண்டான் ...
ஒருசில மதங்கள் கழிந்தன ..
ஒருநாள் சந்துருவின் கையில் ஒரு அட்டை , தட்டுப்பட்டது ., அதை தன சித்தப்பாவிடம் காட்டினான் ,
சித்தப்பா: இத ஏ எடுத்த , இது உங்க அன்ன இருக்கற விலாசம் , இத அங்கவை ...
சந்துரு: தூக்கம் இல்லை , அவன் அழுகையை காண்பது போர்வைமட்டும் ,,,
கடைசியில் அந்த முடிவை எடுத்தான் ..........
------------------------------------------------------------
சந்துரு: வண்டிக்காரர் தட்டை இழுக்க , நினைவுகள் முடிகிறது ...
இறுதியாக அவன் அன்னன் இருக்கும் இடம் வந்துசேர்கிறான் ...
அதுஒரு பெரிய மாளிகை , அந்த வீட்டின் காம்பொண்ட் சுவர்மீது ஏறி , அங்கு உள்ள தோட்டத்தை பார்த்தான் ,..
அங்கு ரகு நல்ல உடைகளுடன் , மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டு இருக்கிறான் ...
அவன் கண்களில் நீர்வளிந்தாலும் , ரகு சந்தோசமாக இருப்பதைக்கண்டு மகிழ்ந்தான் ...
பிறகு கண்களை துடைத்து கொண்டு , அங்கு உள்ள காப்பாளரிடம் ,கையில் வைத்திருந்த மஞ்சப்பையை பிரித்து , அதிலிருந்து அவன் அப்பா வாங்கிக்கொடுத்த ரிமோட்காரை
எடுத்து அவரிடம் கொடுத்து , இதை ரகுகிட்ட கொடுங்க என்றுச்சொல்லி , கண்ணீருடன் திரும்பிச்சென்றான் ,..
காப்பாளர் : அய்யா இதை ஒரு சிறுவன் ரகுவிடம் கொடுக்கச்சொன்னான் ,
சார் :யார் எதை கொடுத்தாலும் வாங்கிவிடுவத .., சரி அதை தூக்கி வெளியே போடு ...
காப்பாளர்: அதை வீசவருகையில் .
ரகு:என்ன ஒரு மாதிரிவரிங்க .
காப்பாளர் : ஒன்னும் இல்ல தம்பி அய்யா திட்டிட்டாரு ...
ரகு: என்ன ஆச்சு ...
காப்பாளர்: எல்லாம் இதால வந்தவென.
என்று சொல்லி அந்த ரிமோட்காரை ரகுவிடம் காட்டினார் ,
ரகு: அதை கண்டதும் ஒருநிமிடம் அதிர்ந்துபோனான் ,
பிறகு ரகு அழுதபடிகேட்க , காப்பாளர் நடந்ததை சொன்னான்,
சந்துரு: தெருவில் ரகுவை நினைத்து அழுதபடி சென்றுகொண்டிருந்தான் ,
சற்றென அவன்முதுகில் எதுவோ வந்து அடித்தது , என்னவென்று பார்த்தான் , அது அவன் கொடுத்த ரிமோட்கார் ,
அருகில் சந்துரு என்று ஒரு அழுகுரல் . திரும்பினால் அது ரகு .
சந்துரு என்று அவனிடம் ஓடிவந்து
ரகு:ஏன்டா என்ன பாக்காம போன ....
சந்துரு: கண்ணீர் வலிந்த சிரிப்புடன் .. நீ ஏன்டா என்ன விட்டுட்டு போன ....
ரகு: கிலே இருந்த ரிமோட்காரை எடுத்து , இத நீயே வச்சுக்கோ , இனி நா உன்ன விட்டுட்டு
எங்கயும் போமாட்ட ......
என்று சொல்லி இருவரும் கட்டியானைத்துக்கொண்டனர் .....