மோகன புன்னகை - 1
அன்று கல்லூரியின் முதல் நாள்....
எல்லாரையும் போலவே மீராவும் மிகுந்த பரபரப்பும் உற்சாகத்துடனும் காணப்பட்டாள்...
அவளது கல்லூரி அவள் ஊரில் இருந்து 40 நிமிட பயண தூரத்தில் இருந்தது. அவளுக்கு கல்லூரி பேருந்தில் செல்லவே விருப்பம். அதற்கும் அவளது பெற்றோர் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர். பேருந்து நிறுத்தத்தில் அவளை போலவே முதலாம் ஆண்டு அவளது கல்லூரியில் சேர்ந்து இருக்கும் பெண் மீனாவை பார்த்தாள். அவளுடன் அறிமுகம் ஆகியதில் அவள் வேறு பிரிவு என்று அறிந்து கொண்டாள். இருவரும் முதல் நாள் கல்லூரி பரபரப்பில் நின்று கொண்டிருந்தனர். பேருந்தும் வந்தது. அவளது நிறுத்தத்தில் இருந்து சில மாணவர்களும் மாணவிகளும் அவர்களுடன் அதே பேருந்தில் ஏறினர். அந்த பேருந்தில் ஆண்கள் பேருந்தில் முன்பாதியிலும் பெண்கள் பின்பாதியிலும் அமர்ந்து இருந்தனர். மீனாவுக்கும், மீராவுக்கும் பேருந்தின் கடைசி நீண்ட இருக்கையில் இடம் கிடைத்தது. பேருந்து அடுத்த நிறுத்தத்திற்கு சென்றது.அதில் 3 மாணவிகளும் 1 மாணவனும் ஏறினர். அந்த மாணவன் அவனை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது மீராவிற்கு....
ஆனால் அவன் யாரையுமே சட்டை செயாத பாவத்தில் பேருந்தில் ஏறி அவன் இருக்கைக்கு சென்றான்.பேருந்து அடுத்த நிறுத்தம் நோக்கி சென்றது. அடுத்த நிறுத்தத்தில் 2 மாணவிகள் ஏறினர். பேருந்து தொடர்ந்து அதிவேகத்தில் கல்லூரி நோக்கி நகர்ந்தது. மீராவின் அந்த ஊர் கேரள தமிழ்நாடு எல்லையை ஒட்டி அமைந்த ஊர். இயற்கை அன்னை கொஞ்சம் குறைவில்லாமல் செழித்து வளர்ந்து நின்றிருந்தாள். பேருந்தின் வேகத்தில் முகத்தில் அடித்த குளிர் காற்றின் குளுமையை ரசித்தபடி வெளிய ரசித்துகொண்டிருந்தாள்...
மீரா கேரளா குடும்ப பின்னணியை சேர்ந்த தமிழ் பெண். எளிதில் அனைவருடனும் பழகிவிடும் குணம். ரசிக்க ரசிக்க பேசுவாள். பள்ளியிலும் அவளுக்கு நண்பர்கள் அதிகம். அவள் இருக்கும் இடம் எப்போதும் கேலியும் கிண்டலும் என் கலகலத்து கொண்டே இருக்கும். மிகபெரிய லட்சியங்களை சிறிய இதயத்தில் கொண்டு கல்லூரி எதிர்நோக்கி காத்திருந்தாள்.
அவளது கல்லூரி கலை கல்லூரி அவள் கல்லூரிக்கு அருகிலயே பொறியியல் கல்லூரியும் அமைந்திருந்தது. ஆனால் மீராவின் கலை கல்லூரிக்கு போரியல் கல்லூரியில் இருந்து நடந்து தான் செல்ல வேண்டும். பேருந்து கல்லூரியை எட்டியிருந்தது.
மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்திருந்தது அந்த கலை கல்லூரி. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என செடிகளும் மரங்களும் மீராவின் பார்வைக்கு விருந்தளித்து கொண்டிருந்தன. ஒரு பக்கம் சிறிய நீர் ஓடை மறுபக்கம் பள்ளம் என அழகான அந்த பாதையில் நடந்து கல்லூரி சென்டர்கள் மீரா வும் மீனா வும்.
அவர்கள் முதல் நாள் வகுப்பு நல்முறையில் கழிந்தது. மீரா அவளுடன் பள்ளியில் அவளது வகுப்பில் படித்த 4 மாணவிகள் அவளுடைய தற்போதைய வகுப்பில் இருந்ததில் மகிழ்ச்சி கொண்டு அவர்களுடன் சென்று ஒரே பெஞ்சில் அமர்ந்தாள். அதில் ஒருத்தி அவளும் கல்லூரி பேருந்தில் வருவதாக கூறவே மீராவிற்கு நல்ல கூட்டணி கிடைத்தது. மாலையில் இவர்கள் முதலில் சென்று பேருந்தில் ஏற பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரை மணிநேரம் கழித்தே கல்லூரி முடிவடைந்தது. மாணவர்கள் வர தொடங்கினர். பேருந்து நிறைந்தது. மாணவர்களின் சத்தமும் கூச்சலும் காலியில் இல்லாத ஆர்ப்பாட்டமும் களைகட்டியது. அவர்கள் செய்த சிறு சிறு கேலிகளை நோக்கி சிறிது கொண்டிருந்தனர் சில மாணவிகள். மீராவிற்கு ஜன்னல் ஓரம் இடம் கிடைத்திருந்தது. அபோது பேருந்து நோக்கி ஓடி வந்தான் ஒருவன்
அவன் முகம்... காலையில் அவள் பார்த்த அதே முகம்... எங்கேயோ பார்த்ததை போல் அவளுக்கு தோன்றிய அந்த முகம்... அவன் பேருந்தில் அருகில் வேகமாய் வர வர அவன் முகம் பார்க்கும் ஆவல் அவளுக்குள்ளே அதிகமாஇருந்தது.
சட்டென்று அவளை யாரோ தட்டி அழைக்க திரும்பினாள். அவள் கலை கல்லூரியின் மூத்த மாணவிகள் சிலர் அவளை தட்டி அழைத்து அவளோட அறிமுகம் ஆகிகொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி முதல் நல பலகம் போல் இளமை மிக சகஜமகாக பழகினால். அவள் பெயர் கார்த்திகா. அவள் அவனின் நிறுத்தில் இருந்து வருபவள். அவள் பேச்சை போல் அவளும் அழகா இருந்தாள். பேருந்து மீண்டும் புறப்பட்டது. மீரா ஜன்னல் வழி காட்சிகளை ரசித்து கொண்டிருந்தாள். கூடடையும் பறவைகள்... அந்த மாலை நேரம்... ரசிக்க தெரியாத பலரும் காதில் ஹெட் போன் வைத்து பாடல்கள் கேட்டு தூங்க ஆரம்பித்திருந்தனர்...
கார்த்திகாவின் நிறுத்தம் வந்தது. பை என கூறி எழுந்தவள் எதிரே நோக்கி புன்னகைத்தாள். யார் எதிரில் என நோக்கிய மீரா கண்டது அவனின் புன்சிரிப்பை . இவனுக்கு சிரிக்க கூட தெரியுமா என்று எண்ணியவள் அவன் பல் தெரியாத இதழ் விரிப்பின் புன்னகையில் லயித்து தன் போயிருந்தாள். தன்னை மறந்து அவனை நோக்குவதை உணர்த்த நொடி வெளியே திரும்பி கொண்டாள். அவன் பேருந்தில் இருந்து இரங்கி விட்டான். எங்கோ பார்த்திருக்கிறோம் எங்கே என்று தெரியவில்லையே என்று எண்ணியவரே மறுபடியும் அவனை நோக்கினாள். கார்த்திகா அவனிடம் ஏதோ சொல்லி கொண்டிருந்தாள். அவன் மீண்டும் புன்னகைதான் அவளுக்கு பதிலாக. இவனை பார்த்தால் எல்லாம் மறந்து விடும் என்று மீண்டும் பேருந்தினுள் தன் தலையை இழுத்து கொண்டாள். ஒருகணம் கண்மூடி யோசித்தாள் நினைவில் அவன் புன்னகை...
அந்த மோகன புன்னகை....