திறவாத கதவு

எல்லா வீதியிலும்
வீடுகள் இருந்தன
வீடுகளில் வாசல்கள்
இருந்தன
வாசல்களில் கதவுகள்
இருந்தான்
கதவுகளில் இலக்கங்கள்
பெயர்கள் இருந்தன
உள்ளே மனிதர்களும்
இருந்தனர்
கதவைத் தட்டிய போது
கதவு திறந்தது
இதயம் மூடிக் கிடந்தது
வருந்திய மானுடம்
திரும்பி நடந்தது
இன்னும் ஏதோ ஒரு
வீதியை நோக்கி ...
~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (8-Jul-15, 10:04 pm)
பார்வை : 173

மேலே