மலர்க் கதவு

மலக் கதவு
மெல்லத் திறந்த போது
மலர் வாசலில் மணம் கமழ்ந்தது
மணம் நுகர்ந்த தென்றல்
மௌன ராகம் பாடியது
மௌன ராகத்திற்கு வண்டுகள்
இசை வடிவம் தந்து ஆலாபனை செய்தது
ஆலாபனையில் கொடிகள் அசைந்தன.
கொடி அவளும் ரசித்து வந்தாள் !

~~~கல்பனா பாரதி ~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (8-Jul-15, 10:35 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
Tanglish : malark kadhavu
பார்வை : 185

மேலே