பூக்களே கற்றுக்கொடுங்கள்

பூக்களே காற்றின் தாளத்திற்கு
அசைந்து அசைந்து நடனமிட்டு
ஆண்களின் கண்களை ஈர்க்கிறாய்.!

உன் மணத்தை வலையாய்
வீசி வண்டின் மனதை
வளைக்கிறாய்.!

உதட்டில் தேனை வைத்து
முத்தத்திற்கு பட்டாம்பூச்சியை
தூண்டுகிறாய்.!

வண்ண வண்ண சேலை
உடுத்தி.! மங்கையர் உன்மீது
பொறாமை கொள்ளச்செய்கிறாய்.!

எல்லோரையும் இப்படி
கவர்ந்து இழுக்கிறாயே.!

எங்களுக்கும் அதை
கற்றுக்கொடுப்பாயா..??

உன் மாலையின் மணம்
இருநெஞ்சங்களில் இடம்
மாறினால் அங்கே திருமணம்.!

மணமகளும் மாப்பிள்ளைக்கு
தாலி கட்டுகிறாள் என்றால்
அது உன் பூமாலையே.!
மணமகளுக்கு மாப்பிள்ளையின்
முதல்தாலி என்றால் அதுவும்
உன் பூமாலையே.!

பூவே.! அவன்கையில் இருந்து
அவள்கைக்கு நீ தாவினால்
காதல்வெற்றி.! காலில்
தவறினால் காதல் தோல்வி.!

வெற்றியில் காதலுக்கு
கொடிகாட்டியும் நீயே.!
தோல்வியில் கல்லறைக்கு
சாலையில் வழிகாட்டியும்
நீயே.!

ஓரிரு நாட்களே உன் வாழ்வு
என்றாலும் ஒளிமயமாய்
உலகில் திகழ்கிறாயே.!

எங்களுக்கும் அதை
கற்றுக்கொடுப்பாயா..??

எழுதியவர் : பார்த்திப மணி (9-Jul-15, 12:07 am)
பார்வை : 234

மேலே