ஏய்ய்ய் சவ்வுமிட்டாய்

ஒருபடி சர்க்கரையும்
கொஞ்சமா எலுமிச்சைத் தண்ணியும்
ரோசாப்புக் கலர் பவுடரும் சேத்துக் காய்ச்சி
இராவெல்லாம் ஆறவச்சி
கண்ணாடித் தாளுசுத்தி
மூங்கில் குச்சிமுனை ஏத்தினாலும்,
சின்னதாச் சோளக்கொல்லை
பொம்மையொன்ன வெச்சாத்தான்
சுளுவுல அதச்சுத்தி
ஈயா வந்து நிக்கும்
சின்னதுங்க கூட்டம்..
இழுக்க இழுக்க வந்துரும்,
கலரும் மாறாது,
மூங்கிலையும் தேய்க்காது,
`ஏய்ய்..சவ்வு மிட்டாய்`னு சத்தம் வந்தா
அது அப்படியேதேன் கெடக்கும்..
நாந்தேன் திரும்பிப் பார்ப்பேன்...!