நடுநிசி ஓலம் -கார்த்திகா

தவறவிட்ட எழுதுகோலின்
உடைந்த கூர்முனை
தரை தட்டியதில்

ஹெலன் கெல்லரும்
இந்திரா காந்தியும்
மீண்டும் விழித்துவிட

எழுதுகிறேன்
எரிதழல் கொட்டி
புகை அணைக்க
பச்சை இலைகள்..

என்னுள் வரிகள்
தேடவேண்டிய அவசியமில்லா
ஆழ்ந்த கட்டுரையின் முடிவில்

செய்தியாய் இந்திய தேசத்தின்
தலைநகரில் கால் டாக்ஸி
ஓட்டுனரின் வரம்பற்ற செயலால்
உயிர் துடித்திருந்தாள் ஒருத்தி !!

எழுதியவர் : கார்த்திகா AK (9-Jul-15, 6:26 pm)
பார்வை : 180

மேலே