இமையே கொஞ்சம் அசையாதே
விடிந்து விட்டதோ அவள்
விரல்கள் என் இமைமீது
எழுந்து விடவே தோணவில்லை
இப்படியே என் கனவு
அவள் கைபிடித்து கொள்கிறது
பகலவன் அவள் பாரடா என்றாலும்
படுத்தே இருக்க தோன்றுகிறது
காதல் படுத்தும் பாட்டை
காத்திருந்து இரசிக்க தோன்றுகிறது
ஏதோ என் இமை இளமையால்
எல்லோரையும் போல் துடிக்கும்போது
இடைவெளிவிட்டு மூடும்போது
இரவு என்று நினைத்து இப்படி நடந்து கொள்கிறது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
