என் பெற்றோருக்கு இனிய திருமண நாள் வாழுத்துக்கள்

தெருவில் கிடக்கும் கல்லை எடுத்து
சிலையாய் வடித்து தெய்வம் ஆக்கும்
சிற்பிக்கு ஏனோ நன்றி சொல்ல
மறந்தே போகுது சிலைகள்!
ஆறறிவு கொண்டு இறைவன்
அதனைப் படைக்காததினால்!

ஆறாம் அறிவு ஒன்றினை
கொடுத்ததினால் வாழ்த்துகிறேன் இன்று
என்னை வடித்த சிற்பிகளை
"இனிய திருமண நாள் வாழ்த்துகள் என் பெற்றோர்க்கு"
நன்றிகள் சொல்கிறேன் இறைவா உனக்கும்
நான் வாழ்த்த ஒரு தருணம் தந்தமைக்கு!

எழுதியவர் : Narmatha (10-Jul-15, 11:53 am)
பார்வை : 3520

மேலே