நட்புடன் நான் எழுதிய மடல் ~ என் தோழிகளுக்கு சமர்ப்பணம்

அன்பு,அறிவு,பாசம்,பரிவு,கோபம்,சிரிப்பு,அழுகை,பகிர்வு,வெகுளித்தனம்,விட்டுக்கொடுத்தல்,
சந்தோஷம்,துக்கம்,அடி,மன்னிப்பு,உரிமை,ஏக்கம்,இழப்பு,தவிப்பு,மறதி,புதுமை.
தேடல்,வியப்பு[ஆச்சரியம்],அனுபவம்,விடாமுயற்சி,ஊக்கம்,பாதை,உண்மை,நம்பகத்தன்மை,உதவி,சண்டை,சமாதானம்,கலகலப்பு,கேளி,கிண்டல்,நய்யாண்டி,உறுதுணை,சொர்க்கம்.
ஆக்கம்,பயணம்,எதிர்பார்ப்பு[அன்பை மட்டும்],காத்திருப்பது,நட்பு என்ற வார்த்தைக்குள் எல்லா உறவும் அடக்கம்,மேலகீழ பாத்து வர்றதில்ல நட்பு நமக்கு இவங்க தோழியா கெடச்சா Life நல்லா இருக்கும்னு நமக்கு தோணும்,எப்பயுமே Friends-வோட Introduction part ரொம்ப simple-ஆ இருக்கும் ஆனா அவங்களோட Friendship path ரொம்ப நீளமானது.


தவம்,வரம்,பக்தி,ஆத்மா,பற்று,தன்னலமற்றது,வித்தியாசம் காட்டாதது[பாராதது],தவறு செய்தால் நீ தவறு செய்தாய் என மறைக்காமல் சொல்வது,வெளிப்படை,அக்கறை,நல்வழிப்படுத்துதல்,தைரியம்,வேண்டுகோள்,கட்டளை.
வேகம்,சுறுசுறுப்பு,சாதனை,வேதனை(->உனை பிரிந்தால்),சரித்திரம்,நண்பர்கள் மாறலாம் நட்பு மாறாதது,நட்பில் மட்டும் தான் வயது வித்தியாசம் பார்க்காமல் நண்பர்கள் இருப்பார்கள்,நட்பில் மட்டும் தான் வாழ்நாள் முழுவதும் நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள்,தடுக்கி விழுந்தால் தாங்கி பிடிப்பவள் தோழி,எல்லாத்தையும் செய்துட்டு அமைதியா உட்கார்ந்துட்ருப்பா,விளம்பரமற்றவள்,நட்பு என்பது கற்பனை அல்ல.
பரிசுத்தமானது,கண்ணாடி போன்றவள்(ஏன் நான் அவ்வாறு கூறுகிறேன் என்றால் நான் அழுதா அவளும் அழுவுவா,நான் சிரிச்சா அவளும் சிரிப்பா),பிரியக் கூடாததுநட்பு.
நட்பைக் கூட கற்பை போல எண்ணுவேன்(தளபதியில் வரும் பாடல் ),நட்பு என்பது நீ தவறு செய்யும்போது தண்டிக்கும் ஆயுதம் அல்ல,உன்னை திருத்தம் செய்யும் அழிப்பான்.

மகாபாரதத்தில் இரு வேறு விதமான இரண்டு நட்பு கூறப்பட்டிருக்கும்.
ஒன்று
துரியோதனன்-கர்ணன்
மற்றொன்று
கண்ணன்-குசேலன்.
ஆனால் எனக்கு பிடித்தமான நண்பர்கள் துரியோதனன்-கர்ணன் தான்.
நட்பிற்கு இலக்கனம்னா இவங்க ரெண்டு பேர தான் குறிப்பிட்டாக வேண்டும் அது தான் உண்மை.

துரியோதனன்-கர்ணன் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்தவன்.
கர்ணன்-துரியோதனன் மீது அளவு கடந்த அன்பு வைத்தவன்.
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதது நட்பு,நாம் படித்து கற்றுக்கொள்வதை விட நண்பர்களிடம்
இருந்து கற்றுக்கொள்வது தான் அதிகம்.

நண்பர்கள் இல்லா பள்ளி,கல்லூரி நினைத்தாலே கொடுமை,
உதிராத ஒரே பூ(பு) நட்பு,
மூழ்காத ஒரே Ship –Friendship,
வார்த்தையிலே முடிவைக் கொண்டிருக்கும் (END) ஒரே ஒரு முடிவற்ற வாழ்க்கையின் வார்த்தை FRIEND,,,,,

என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே(நாடோடி படத்தில் வரும் வரிகள்),
நீ எத (எதை ) செய்தாலும் சரின்னு சொல்றதில்ல நட்பு,நீ செய்றதுல ஏது சரி ஏது தப்புன்னு Correct-ஆ சொல்றது தான் நட்பு,

தடுமாறும் போது தாங்கிபிடிப்பவனும்
தடம்மாறும் போது தட்டிக் கேட்பவனும்
உண்மையான நண்பன்(தோழி).....
~ எங்கேயோ படித்த கவிதை
நட்பு-அதனுள் அனைத்தும் அடக்கம்,
தோழி-உண்மையானவள்,
கொஞ்சம் கூட அகங்காரமே இல்லாதது நட்பு,

நட்பில் இல்லாதவை:
ஆணவம்,பொறாமை,சந்தேகம்,பழி,வஞ்சனை,ஏமாற்றுதல்,தூற்றுதல்,தாழ்த்துதல்,
காயப்படுத்துதல் இவை அனைத்துமே நட்பில் இல்லவே இல்லை.






சந்தோஷமோ,துக்கமோ அவளோட தோள் எனக்கு எப்பயும் தோள் கொடுக்க மறந்ததே இல்லை.
சின்ன சின்ன சண்டை,
சின்ன சின்ன கோபம்,
சின்ன சின்ன திட்டல்,
சின்ன அடி
இதுக்கு அப்புறம் சமாதானம்
இதெல்லாம் நட்பிற்கு உயிரோட்டம்,
கொஞ்சல் ,கெஞ்சல்,நாம Class-ல இருக்க எல்லாருக்கும் Wishes-ஒ இல்ல
எதாவது ஒன்னு பண்ணிருப்போம் .அப்ப நம்ம Friend-அ மட்டும் வேணும்னே
விட்டிருப்போம்.
ஏன்னா அவங்க Reaction அப்ப எப்படி இருக்குனு பாக்க ரொம்ப ஆவலா இருக்கும்.
அப்ப ஒரு பார்வை மட்டும் தான் பாப்பாங்க ,ஆனா அந்த பார்வையே ஆயிரம் கதை
சொல்லும் ,”நீ அவ்ளோ தானா! என் மேல உனக்கு பாசமே இல்லையா!
என்ன மறந்துட்டல்ல ”,இது தான் அவங்களோட எண்ண ஓட்டமா இருக்கும்.

புன்னகை,சும்மா அலைகழிப்பது,நடிப்பது இதுவும் நட்பை வெளிக்கொணரும் முறைகள்,
நான் இறந்தாலும் என் நட்பு சாகாது.இவ்வுலகிற்கு என் நட்பை பறை சாற்றிவிட்டு செல்வேன்.

நான் இறக்கும் தருவாயிலும் என் தோழிகள் என் உடன் இருக்க வேண்டும்,அப்பொழுது
நான் மரணத்தையும் தைரியமாக எதிர்கொள்வேன்.நான் அப்ப ரொம்ப சந்தோஷப்படுவன்.
என்னோட கடைசி நிமிஷம் வரைக்கும், என் Friends-அ நான் பாத்துக்கிட்டே இருந்தன்,
என் Friend மடியில சாவதற்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்...

எல்லா சூழ்நிலைகளிலும்
நாம் நாமாக வெளிக்காட்டிக் கொள்வது
நம் குடும்பத்தினருடனும் ,நண்பர்களுடன் மட்டுமே...




சாஸ்திரம் நட்பிற்கில்லை
ஆத்திரம் நட்புக்கு உண்டு காட்டவே!
~From நாடோடி திரைப்படம்.

சிரிச்சி பேச மட்டும் தான் Friendsன்னு சில பேர் நெனைக்கலாம் ஆனா அது இல்ல நட்பு.
நாடோடி திரைப்படம் மாதிரியே தான் ஆத்திரம் வந்தா ரௌத்திரம் பழகுவதிலும் தவறுவதில்லை நட்பு.

அன்பு காண்பிக்கிறேன்னு சொல்லிட்டு பயமுறுத்தறதில்ல நட்பு,அன்பால அரவணைக்கறது தான் நட்பு.
அன்பா இருக்கறன்னு சொல்லிட்டு அன்பால கட்டிப் போடறது ஒன்னும் நட்பில்ல ,அதுக்கு நீ ஒரு நாய்க்குட்டி மேல அன்பா இருக்கலாமே,ஏன் ஒரு மனிஷி மேல உன் அன்ப திணிக்கற,

அன்புங்கிறது Friendsக்கு என்ன தோணுதோ அத செய்யவிடனும்,
அவளுக்கு கெடைக்க(கிடைக்க) வேண்டிய Freedom உன்னால கெட்டுபோககூடாது.
Friendsக்கு இடையே நன்றி ,மன்னிப்பு இருக்காது(எல்லா ஜீவராசிக்கிட்டயும் அவங்க பண்ண உதவிக்கு நன்றியும் ,நாம பண்ண தவறுக்கு மன்னிப்பும் கேக்கணும்),

நட்பில் விட்டுக்கொடுத்தல் உண்டு...
ஆனால்
எதற்காகவும் நண்பனை விட்டுக் கொடுத்ததில்லை !...

என் Friend எனக்காக அழும்போது மனசு நெகிழ்ந்து தான் போகும்...
எனை ஸ்பரிசித்து ஆறுதல் கூறும் வேளையில் வலிகள் மறைந்து போவதை
உணர முடிந்தது...
அவள கோபத்துல அடிச்சாலோ திட்டனாலோ மனசு வலிக்க ஆரம்பிச்சிடும்..




என் தோழி வெற்றி பெரும் பொழுது அவள வாய் விட்டு பாராட்டணும்,
தோல்வியில துவண்டு போய்
இருந்தா ஆறுதல் கூறி அவளுக்கு உறுதுணையா இருப்பன்.
அவளின் வெற்றியில் கைகள் தட்டிக் கொடுக்க மறக்காது...
அவளோட கஷ்டத்துல நான் பங்கெடுத்துப்பன்,அவள ஆரத்தழுவி அரவணைத்து தோள்களை தடவி கொடுப்பன்.,இன்னொரு தாயானவள் =தோழி,
எதையும் மறைத்ததில்லை என் தோழியிடம்,குறும்புத்தனம்,குறை கூறாது நட்பு,நிறையை மட்டுமே பார்க்கும் நட்பு,

நண்பன் நம்மை அடித்தாலும் உதைத்தாலும் கோபம் வருமே தவிர ஒரு காலமும் வெறுப்பு ஏற்படாது.
“சோகத்தை நட்பில் மறந்தோம்.எந்த சோகத்திலும் நட்பை பிரிக்க முடியாது...”
காலம் கலிகாலம்.நல்ல மனிதர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நண்பர்கள் வாயிலாகத் தான் உணர முடிகிறது.
ஒளிவு மறைவு அற்றது,தெளிவு,சத்தியத்தை காப்பாற்றுவது,எல்லைகள் இல்லாதது,அடக்கம்,அனுபவம்,நம்பிக்கை,மறதி,ஞாபகம்,பிடிப்பு,
சின்ன சின்ன பொய்[யாரையும் காயப்படுத்தாத பொய்],என் தோழி என் நாவில் நஞ்சையே
ஊட்டினாலும் நான் சுகமாக(சந்தோஷமாக) ஏற்றுக்கொள்வேன்...,

என்னுடைய கோபம் எல்லாத்தையும் என் அம்மா அப்பா கிட்டயும் ,என் Friends கிட்டயும் தான் காண்பிக்கிறேன்,என்ன எல்லாரும் மன்னிச்சிடுங்க,நான் எதையும் மனசுல இருந்து
சொல்லல .அப்ப என்ன வாய்ல வருதோ அததான் சொல்றன்.
நாம பேசற வார்த்தைகளில் வேணும்னா
நெறைய False friend[தன்னுடைய மொழியிலுள்ள ஒரு சொல்லைப் போலவே தோன்றும் ஆனால் வேறான பொருள்படும் வேறு மொழியிலுள்ள சொல்;போலிமைச் சொல்]இருக்கலாம் நம்ம Friends யாருமே False-ஆ இருக்கமாட்டாங்க.

உன்னைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமேயானால் முதலில் உனது நண்பனிடம் தான் கேள்வியை தொடுக்க வேண்டும் ஏனெனில் உன்னைப் பற்றி சரியாக அறிந்து வைத்திருப்பவள் அவளே(தோழி[நண்பன்]எதையும் ஏத்தி இறக்கி சொல்லமாட்டா) போலித்தனம் அற்றது நட்பு,Last but not least நட்பு என்ற உறவு பாலம் கடவுள் கொடுத்த வரம் அத எப்பயும் உடையாமலும் கலங்கப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
Friendly->Behaving in a kind and open way தமிழில்->அன்புடன் கள்ளங்கபடமின்றி,பரிவுடன் நடந்துகொள்கிற
நட்புறவு, இறுக்கமற்ற நிலை,கனிவு, இன்முகம்,மகிழ்ச்சி,நலஞ்செய்தல்,ஆதரவு,உதவி புரிதல்,தோழமை,நினைவுகள்,என் தோழி என்னோட உயிர்,அவள எப்பயும் சந்தோஷமா பாத்துப்பன்,முற்றுப்புள்ளியைப் போல் முடிந்து விடுவதில்லை நட்பு...
தொடக்க புள்ளியைப் போல் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதே நட்பு....



ஏன் அடித்தாய்!
எப்படி என்னை திட்டலாம் நீ!
என்ன செய்கிறாய்!
யார் நீ!
எங்கே வந்தாய்!
எதற்காக வந்தாய்!
எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வாய் நீ!
எதை எதிர்பார்த்தாய் என்னிடம்!
என்று
ஒரு நொடி கூட
சிந்திக்காததே
நட்பு ...


~நட்புடன்
பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (10-Jul-15, 1:57 pm)
பார்வை : 1705

மேலே