பலூன்காரனுக்கு மூணு குழந்தைகள்

வெடித்தும், நூல் அறுந்தும்,
வலுவிழந்தும்
காற்று வெளியேறும் முன்னமே
பலூன்களை விளையாடிக் கொள்ளத்
தெரிந்திருக்கிறது குழந்தைகளுக்கு…

விற்பனையாகாது வீடு திரும்பும் பலூன்கள்
காற்றினை இறக்கிவிட்டு
ஓய்ந்து கொள்ளத் தெரியாமல்
போர்த்தப்படும் துணிகளுக்குள்
குழந்தையொன்றின் கைபடாத ஏக்கத்தில்
மௌனமாகி விடுகின்றன…

பலூன்காரனின் மூன்று குழந்தைகளையும்
துணி போர்த்தும் முன்னமே
பார்த்துவிட்டன பலூன்கள்..!

எழுதியவர் : பட்டினத்தார் (11-Jul-15, 7:12 pm)
பார்வை : 72

மேலே