பத்மபூஷண் கவிப்பேரரசு வைரமுத்து அய்யாவிற்கு பிறந்தநாள் நல் வாழ்த்துகள்
"பத்மபூஷண்" "கவிப்பேரரசு" வைரமுத்து அய்யாவிற்கு.. பிறந்தநாள் நல் வாழ்த்துகள்....
===============================
கள்ளிக்காட்டில் பிறந்த
கருவாச்சியின்
காவிய கவியே..
செந்தமிழ் சிற்பியே
வைரத்தின் முதல் முத்தே..
தமிழின் மொத்த சொத்தே..
உன் விரலிடையில்
சிக்கிக் கொண்ட
எழுதுகோலாய்
அகம் மகிழ்கிறேன்
உனக்காய் இக்கவி
எழுதுகையில்..
சொற்களின் எழிலோவியமே..
திரைப்பாடல்களின் மறு பிரவேசமே..
கருப்பு தமிழே..
கவி மழை பொழியும்
கருமை முகிலே..
காலம் கடந்த
கவிஞனே..
கவியால் காலத்தை
கடத்தும் அறிஞனே..
இசையமுதே..
இளைய தமிழே..
காகித காட்டில்
கற்பனை கோடரில்
கவிதை வெட்டும் கள்வனே..
நீ எழுதாத
எழுத்துக்கள் உண்டோ!!
நீ பாடாத
கவிதைகள் உண்டோ!!
உன் பாடல் கேட்டால்
காற்றலையும் காதல் செய்யும்
வானம்பாடியும்
உன் கானம் பாடும்
உன் வரிகளை
தென்றலும் இரவல் கேட்கும்
உன்னை கண்டால்
வெள்ளைத் தாளும்
வெண்பா செல்லும்
உன் விரல் பட்டால்
இரும்பும் இலகுவாய்
இலக்கியமாகும்
உன் படைப்புகளையும்
விருதுகளையும்
சேகரிக்க..
தனி நூலகம் தேவைப்படுமோ!!
சிகரங்களை நோக்கி
தமிழிக்கு நிறமுண்டு
என்று முழங்கியவனே..
வடுகபட்டி முதல் வால்கா வரை
கல்வெட்டுக்களாய்
தன் புகழ் நிறைத்தவனே..
பழைய பனையோலைகளில்
இன்னொரு தேசியகீதம் எழுதியவனே..
ஒரு மெளனத்தின் சப்தங்களில்
காவி நிறத்தில் ஒரு காதல் பாடியவனே..
மூன்றாம் உலகப்போரின்
திருத்தி எழுதிய தீர்ப்புகளை எடுத்துரைத்தவனே..
நிலையாய்.. நிறைவாய்..
உன் புகழ் இவ்வுலகம்
பரவட்டும்..
உன் தமிழ் சேவை
இன்னும் தொடரட்டும்..
மேலும் பல சிகரங்களில்
உன் சாதனை தடயங்கள்
அழியாமல் கிடக்கட்டும்..
புன்னகை குறையாமல்
நோய் நொடி நெருங்காமல்
புகழ் பாதையில்
தடம் பதித்து..
தமிழ் போல்
பல்லாண்டு வாழ்க..
வாழிய வாழியவே..!!